For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஜ்மல் பெரிய 'சுறா'தான்.. இதை விட பெரிய 'திமிங்கலங்கள்' தப்பிக் கொண்டுள்ளன.. பிஷன் சிங் பேடி

Google Oneindia Tamil News

பெங்களூர்: சயீத் அஜ்மல் ஒரு பெரிய சுறாதான். ஆனால் அதை விட பெரிய பெரிய திமிங்கலங்கள் எல்லாம் தப்பிக் கொண்டுள்ளன என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.

பந்தை எறிந்ததாக சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.

இதுகுறித்து பிஷன் சிங் பேடி கருத்து தெரிவித்துள்ளார். அவரது பேட்டியிலிருந்து....

பெரிய சுறாதான்

பெரிய சுறாதான்

சயீத் அஜ்மல் நிச்சயம் பெரிய சுறாதான். அதில் சந்தேகமே இல்லை. அவரை ஐசிசி தடை செய்திருப்பது வரவேற்புக்குரியது.

பெரிய திமிங்கலங்களையும் பிடிக்க வேண்டும்

பெரிய திமிங்கலங்களையும் பிடிக்க வேண்டும்

அதேபோல இவரை விட பெரிய பெரிய திமிங்கலங்கள் எல்லாம் தப்பிக் கொண்டுள்ளனர். அவர்களையும் ஐசிசி பிடித்து தடை செய்ய வேண்டும்.

முன்கூட்டியே பிடித்தது நல்லது

முன்கூட்டியே பிடித்தது நல்லது

சயீத் அஜ்மல் 350 விக்கெட்கள் வரை எடுக்க விட்டு வேடிக்கை பார்க்காமல் முன்கூட்டியே ஐசிசி அவரைப் பிடித்து தடை செய்தது நல்ல விஷயம். பாராட்டப்பட வேண்டியது.

மற்றவர்களையும் பிடியுங்கள்

மற்றவர்களையும் பிடியுங்கள்

இதேபோல மோசடியான பந்து வீச்சாளர்கள் பலர் உலவுகின்றனர். அவர்களையும் பிடிக்க வேண்டும் என்றார் பேடி.

மேலும் சில சந்தேக கேஸ்கள்

மேலும் சில சந்தேக கேஸ்கள்

சமீபத்தில் சசித்ரா சேன்நாயகே, கானே வில்லியம்சன், பிராஸ்பர் உத்சயா ஆகியோரின் பந்து வீச்சுகளும் சந்தேக கண்களில் சிக்கியுள்ளன என்பது நினைவிருக்கலாம்.

English summary
Former India captain Bishan Singh Bedi has labelled banned Pakistan offspinner Saeed Ajmal as "big shark" and wants the International Cricket Council (ICC) to catch the many 'chucking' 'sharks' who are still at large.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X