ஆண்டவா காப்பாத்துப்பா.. கர்நாடக முருகர் கோயிலில் ஐசிசி சேர்மன் சீனிவாசன் சிறப்பு பூஜை!
மங்களூர்: மீண்டும் தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐசிசி சேர்மன், சீனிவாசன், கர்நாடகாவின் பிரபல முருகர் கோயிலான குக்கே சுப்பிரமணியசுவாமி கோயில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனான சீனிவாசன், ஐபில் அணி தொடர்பாக, சுப்ரீம்கோர்ட் நெருக்கடியால், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார்.

ஆனால், சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது ஏற்கனவே அவர் வகித்து வந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தேர்வு நடைபெற்ற உடனேயே, கர்நாடக மாநிலம், மங்களூர் அருகேயுள்ள குக்கே சுப்பிரமணியா கோயிலுக்கு குடும்பத்தோடு சென்றார் சீனிவாசன். அங்கு சிறப்பு பூஜைகளை நடத்தியுள்ளார். பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார். இருநாட்கள் குக்கேவில் தங்கியிருந்த அவர், நேற்று கிளம்பிச் சென்றார்.
குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயில், நாகதோஷ நிவர்த்தி தலமாகும். சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய் போன்ற பல பிரபலங்கள் இக்கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்துள்ளது நினைவிருக்கலாம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications