பிரதமர் மோடி பேட் செய்தால் பந்து மைதானத்திற்கு வெளியே பறக்கும்..ட்வீட்டில் புகழ்ந்துதள்ளிய லலித்மோடி
டெல்லி: ஆளும் பாஜக மீது அத்தனை எதிர்க்கட்சிகளும் பாய்வதற்குக் காரணமான முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தற்போது பிரதமர் மோடியைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
லலித் மோடி பதிவு செய்துள்ள ட்வீட்டில் நமது பிரதமர் விஷயம் அறிந்த மனிதர். அவருக்கு எனது அறிவுரை தேவையில்லை. அவர் பேட் செய்தால் பந்தை மைதானத்துக்கு வெளியே அனுப்புவார்" என்று பதிவிட்டுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ்-லலித் மோடி-வசுந்தரா ராஜே விவகாரம் முற்றியுள்ளதையடுத்து, லலித் மோடிக்கு எதிராக பாஜக இண்டெர்போலிடம் ரெட் கார்னர் நோட்டீஸ் கோரும் என்று கூறியுள்ளதையடுத்து பிரதமரைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
லலித் மோடி தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவுகளில் அரசியல் தலைவர்களை சந்தித்தது பற்றி கூறிவருகிறார்.
வெள்ளிக்கிழமையன்று மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில் சிபலிடம் 3 நாட்கள் சாட் செய்ததை வெளியிட்டிருந்தார்.
இதே நாளில் முன்னதாக பிரியங்கா, மற்றும் வதேராவை சந்தித்ததாக ட்வீட் செய்து பரப்பரப்பு ஏற்படுத்தினார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சி, சோட்டா மோடி, படா மோடிக்கு உதவி புரிவதாக சாடியது.
பாஜகவும் தன் பங்குக்கு, இந்த சந்திப்பு குறித்து சோனியா பதில் கூற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
'சோட்டா மோடி, படா மோடி' என்ற காங்கிரஸ் சாடலை அடுத்தே இன்று பிரதமர் மோடிக்கு தனது அறிவுறை தேவையில்லை என்றும் அவரே தனக்கு வரும் பந்துகளை மைதானத்துக்கு வெளியே அடிப்பார் என்றும் லலித் மோடி ட்வீட் செய்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications