ட்விஸ்ட்! காங்கிரஸை போல் ரெசார்ட் அரசியலை கையிலெடுத்த பாஜக! ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தலில் என்னாச்சி?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 4 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் 10ல் நடைபெற உள்ளது. ஆனால் 5 பேர் போட்டியில் உள்ளதால் பாஜகவுக்கு பயந்து காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சி எம்எல்ஏக்களை ரெசார்ட்டில் தங்க வைத்துள்ளது. இந்நிலையில் தான் பாஜகவும் திடீரென்று தனது எம்எல்ஏக்களை ரெசார்ட்டில் தங்க வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் 15 மாநிலங்களில் இருந்து 57 ராஜ்யசபா எம்பிக்களை தேர்வு செய்யும் தேர்தல் ஜூன் 10ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுக்கள் முடிவடைந்தது.
தமிழகம் உள்பட சில மாநிலங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யட்டுள்ளனர். தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகம் உள்பட 11 மாநிலங்களை சேர்ந்த 41 பேர் போட்டியின்றி ராஜ்யசபா எம்பிக்களாக தேர்வாகி உள்ளனர்.

ராஜஸ்தானில் 4 இடங்களுக்கு தேர்தல்
ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அங்கு ஜூன் 10ல் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் இருந்து மொத்தம் 4 பேர் ராஜ்யசபாவுக்கு தேர்வாக உள்ளனர். மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளதால் ராஜ்யசபா எம்பியாக போட்டியிடும் நபர் ஒருவருக்கு 41 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

காங்கிரஸ் சார்பில் மூவர் போட்டி
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோர் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் 2 பேரின் வெற்றி உறுதியாகி உள்ளது. இதுதவிர காங்கிரஸ் கட்சிக்கு 21 எம்எல்ஏக்களின் ஓட்டு உபரியாக இருக்கும். இதனுடன் சுயேச்சைகள் மற்றும் பிறகட்சி எம்எல்ஏக்களின் உதவியுடன் 3 வது நபராக பிரமோத் திவாரியை வெற்றி பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பாஜக சார்பில் இருவர் போட்டி
இது ஒருபுறம் இருக்க பாஜகவுக்கு 71 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதன்மூலம் ராஜ்யசபா வேட்பாளர் கன்ஷியாம் திவாரியின் வெற்றி உறுதியாகி உள்ள நிலையில் 30 எம்எல்ஏக்களின் ஓட்டுக்கள் உபரியாக இருக்கும். இதனை வீணாக்க விரும்பாத பாஜக சுபாஷ் சந்திராவை களமிறக்கி உள்ளது. இவரும் பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு போக சுயேச்சை, பிற கட்சி எம்எல்ஏக்கள் 11 பேரின் ஆதரவுகளை பெற்று வெற்றி பெற உள்ளார்.

சூடுபிடித்த அரசியல் களம்
மொத்தம் 4 வேட்பாளர்கள் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் காங்கிரஸ் சார்பில் 3, பாஜக சார்பில் 2 பேர் என மொத்தம் 5 பேர் போட்டியிட்டுள்ளனர். இதனால் எம்எல்ஏக்களை பாதுகாப்பதில் இருகட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் தவிர சுயேச்சையாக உள்ள 13 எம்எல்ஏக்கள், ஆர்எல்பி கட்சியின் 3 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிடிபி கட்சியின் தலா 2 எம்எல்ஏக்கள், ஆர்எல்டி கட்சியின் ஒரு எம்எல்ஏ என மொத்தம் 21 எம்எல்ஏக்களின் ஆதரவுகளை பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் ராஜஸ்தான் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

ரெசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
இதற்கிடையே தான் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாஜக குதிரைபேரத்தில் ஈடுபட்டு இழுத்துவிடலாம் என காங்கிரஸ் கட்சி அஞ்சியது.இதனால் எம்எல்ஏக்களை பாதுகாப்பவதற்காக ரெசார்ட் அரசியலை கையில் எடுத்தது. அதன்படி கட்சி எம்எல்ஏக்களை முதல்வர் அசோக்கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ஜூன் 2ம் தேதி முதல் உதய்ப்பூரில் உள்ள ரெசார்ட்டில் தங்கி உள்ளனர்.

பாஜகவினரும் ரெசார்ட்டில்...
இதன் தொடர்ச்சியாக பாஜகவும் தங்கள் எம்எல்ஏக்களை ரெசார்ட்டில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பட நேற்று கட்சி அலுவலகத்துக்கு பாஜக எம்எல்ஏக்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்து 2 பஸ்களில் அவர்கள் ஜெய்ப்பூர் புறநகர் ஜாம்டோலியில் உள்ள தேவிரத்தன் ரெசார்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பயிற்ச்சிக்காக...
எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கட்டாரியா கூறுகையில், ''மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தொடர்பாக எம்எல்ஏக்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரெசார்ட்டுக்கு அழைத்து செல்கிறோம்..ஏனென்றால் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். சிறுதவறு கூட உறுப்பினர் தேர்வை கேள்விக்குறியாக்கிவிடும். இதன் பின்னணியில் வேறு எந்த காரணமும் இல்லை'' என்றார். இருப்பினும் ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியிடம் இருந்து தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் தான் இந்த முடிவை பாஜக எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications