டீம் ஹோட்டலுக்கு செல்லாமல்.. காரை எடுத்துக்கொண்டு நேராக கிளம்பிய டிராவிட் -எங்கே போனார்? செம சம்பவம்
கொல்கத்தா: இந்திய அணியின் கோச் ராகுல் டிராவிட் நேற்று டீம் ஹோட்டலுக்கு செல்லாமல் வெளியே சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது. 2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்தது.
இதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இந்திய அணி நியூசிலாந்து அணியை டி 20 தொடரில் வீழ்த்தி உள்ளது. அதிலும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்ட பின் பதிவான தொடர் வெற்றியாகும்.

பயிற்சியாளர்
இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வெற்றியோடு தொடரை தொடங்கி உள்ளார். கோலி இல்லாமல் இளம் அணியோடு ராகுல் டிராவிட் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார். அடுத்த வருட உலகக் கோப்பை டி 20 தொடருக்காக இந்திய அணி இப்போதே டிராவிட் பயிற்சிக்கு கீழ் தயாராக தொடங்கிவிட்டது.

டிராவிட்
ராகுல் டிராவிட் பயிற்சியில் புதிய வியூகங்களை புகுத்தி வருகிறார். வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அணியில் புதிய விஷயங்களை டிராவிட் டெஸ்ட் செய்ய தொடங்கி உள்ளார். இதுவரை அவரின் பயிற்சி நுணுக்கங்கள், வியூகங்கள் எல்லாம் சிறப்பாக இருந்தன.

இரண்டாவது டி 20
அதிலும் இரண்டாவது டி 20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மிக சிறப்பாக பேட்டிங் செய்தது. ஆனால் கடைசியில் டெத் ஓவர்களில் நியூசிலாந்தை கட்டுப்படுத்தி 153/6 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. இந்திய அணியின் டாப் பவுலிங்கும், ரோஹித் - ராகுலின் வியூகமும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

என்ன செய்தார்
மூன்றாவது டி 20 போட்டி கொல்கத்தாவில் நடக்க உள்ளது. இதையடுத்து நேற்று கொல்கத்தா வந்த அணி வீரர்கள் ஹோட்டலில் தங்கி ரெஸ்ட் எடுத்தனர். ஆனால் அதிகாலையில் இந்திய அணியின் கோச் ராகுல் டிராவிட் டீம் ஹோட்டலுக்கு செல்லாமல் நேராக ஏர்போர்ட்டில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேரடியாக ஈடன் கார்தான் சென்றுள்ளார்.

ஈடன் கார்டன்
அணி வீரர்களுடன் ஹோட்டலுக்கு செல்லாமல் மேட்ச் நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்திற்கு ராகுல் டிராவிட் சென்றுள்ளார். அங்கு பிட்ச் எப்படி இருக்கிறது என்று பார்த்துள்ளார். சமீப போட்டிகளில் பிட்சும், டாஸும்தான் ஆட்டத்தின் முடிவை மாற்றுகிறது.

டாஸ்
டாஸ் வெல்வதும், பிட்சை புரிந்து கொள்வதும் முக்கியமான விசயமாக பார்க்கப்படுகிறது. இதனால்தான் டிராவிட்டும் நேரடியாக மைதானத்தில் விசிட் அடித்துள்ளார். டிராவிட் இப்படி திடீரென மைதானம் சென்றதை பார்த்து இந்திய வீரர்கள் சிலர் வியந்து உள்ளனர். ஓய்வு கூட எடுக்காமல் இப்படி நேரடியாக பணியில் குறியாக இருக்கிறாரே என்று இந்திய வீரர்கள் பலர் வியந்து போய் டிராவிட்டை பார்த்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications