For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லையில் கூடுதல் படைகள் அனுப்புவது நிறுத்த முடிவு - இந்தியா சீனா பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இந்தியா சீனா எல்லை பகுதியில் விவகாரங்களை முறையாக தீர்ப்பது, அமைதியை கூட்டாக பாதுகாப்பது ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

லடாக்: எல்லையில் கூடுதல் படைகள் அனுப்புவது நிறுத்தப்படும் என இந்தியா-சீனா கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லை பகுதியில் சூழ்நிலையை மாற்றும் போக்கை கைவிட வேண்டும் எனவும்,
நிலைமையை சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் எனவும் இந்தியா-சீனா கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. அமைதி பேச்சுவார்த்தை மூலமாகவே எல்லைப் பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக இருநாடுகளும் கூறி வருகின்றன. இதுவரை இந்தியா, சீனா ராணுவ தளபதிகள் இடையே ஐந்து கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சீன எல்லைக்குள் இருக்கும் மோல்டோ பகுதியில் காலை 9 மணிக்கு இருதரப்பு ராணுவ பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்திய ராணுவ ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான இந்தியக் குழுவும், சீன ராணுவத்தின் மேஜர் ஜெனரல் லின் லியு தலைமையிலான இந்திய குழுவும் பல மணிநேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தைவான் எல்லைக்குள் 40 முறை பறந்த சீனா போர் விமானங்கள் - தைவான் அதிபர் புகார் தைவான் எல்லைக்குள் 40 முறை பறந்த சீனா போர் விமானங்கள் - தைவான் அதிபர் புகார்

6ஆம் கட்ட பேச்சுவார்த்தை

6ஆம் கட்ட பேச்சுவார்த்தை

பல மணிநேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லை பகுதிகளில் பதற்றத்தை தணித்து அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான முக்கியமான விசயங்களை இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பரிமாறி கொண்டனர்.

கூட்டறிக்கை வெளியீடு

கூட்டறிக்கை வெளியீடு

பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டு உள்ளன.
இந்தியா, சீனா தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்தொற்றுமையை அமல்படுத்துவது என ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. எல்லையில் தொலைதொடர்பினை வலுப்படுத்துதல், தவறான புரிதல்களை தவிர்க்க வேண்டும்.

எல்லை பதற்றம் தணிக்க நடவடிக்கை

எல்லை பதற்றம் தணிக்க நடவடிக்கை

எல்லையை நோக்கி கூடுதல் படைகளை அனுப்பி வைப்பதனை நிறுத்தி கொள்ள வேண்டும். ஒரு தலைப்பட்சம் ஆக எல்லை பகுதியில் சூழ்நிலையை மாற்றும் போக்கை கைவிட வேண்டும் மற்றும் நிலைமையை சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் என அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அமைதி பாதுகாப்பு

அமைதி பாதுகாப்பு

இதேபோன்று இரு தரப்பும், 7வது கட்ட ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் ஒன்றை விரைவில் நடத்தவும் ஒப்பு கொண்டுள்ளன. எல்லை பகுதியில் விவகாரங்களை முறையாக தீர்ப்பது, அமைதியை கூட்டாக பாதுகாப்பது ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

English summary
The two sides also agreed to hold the 7th round of Military Commander-Level Meeting as soon as possible, take practical measures to properly solve problems on the ground, and jointly safeguard peace and tranquillity in the border area: India and China release a joint statement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X