மாஸ்டர் ஸ்ட்ரோக்.. சீனாவுக்கு செக் வைத்த இந்தியா.. பிரம்மபுத்திரா குறுக்கே பிரமாண்ட அணை.. பின்னணி?

Subscribe to Oneindia Tamil

இட்டாநகர்: சீனாவை கடந்து இந்திய எல்லைக்குள் நுழையும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா பிரமாண்ட அணையை கட்ட தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவும் அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய அணையை வேகமாக கட்ட தொடங்கியுள்ளது.

இந்தியாவின் அருணாச்சாலப் பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா தற்போது வரை தங்களுடையதாக கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இந்தியா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த சர்ச்சைகுரிய பகுதிகளில் சீனா தனது கட்டுமானங்களை விரிவுப்படுத்தி வருகிறது. சமீபத்தில் அருணாச்சலப் பிரதேச எல்லையையொட்டியுள்ள பகுதியில் சுமார் 67 கி.மீ தொலைவுக்கு சீனா சாலையை அமைத்தது.

ஏறத்தாழ ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கி 2014ம் ஆண்டு தொடங்கி 7 ஆண்டுகளில் இந்த பிரமாண்டமான சாலையை சீனா கட்டி முடித்திருக்கிறது. 67.22 கி.மீ தொலைவு கொண்ட இந்த நெடுஞ்சாலையானது சீனாவின் நைஞ்சியில் உள்ள பேட் டவுன்ஷிப்பை, மெடோக் கவுண்டியில் உள்ள பைபங் டவுன்ஷிப்புடன் இணைக்கிறது. இந்த கட்டுமான பணிகளை இந்தியா கடுமையாக எதிர்த்து வந்த போதிலும் சீனா விடாபிடியாக சாலையை அமைத்து முடித்துவிட்டது.

அடுத்த நகர்வு

அடுத்த நகர்வு

இதனையடுத்து தற்போது அடுத்த நகர்வுக்கு சீனா சென்றிருக்கிறது. அதாவது, பிரம்மபுத்திரா நதி உருவாகும் சீன எல்லையில் அமைந்துள்ள திபெத் பகுதியில் சுமார் 60,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. சீன அரசின் 'பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன்' இந்த கட்டுமாணப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது 2025ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போல பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவது முதல்முறையல்ல. இதற்கு முன்னரே சுமார் ரூ.1.22 லட்சம் கோடி மதிப்பில் திபெத்தின் 'ஜாம்' நீர்மின் நிலையத்தை சீனா கடந்த 2015ம் ஆண்டு கட்டி முடித்து பயண்பாட்டுக்கு கொண்டு வந்தது.

அணை

அணை

இந்நிலையில் தற்போது இரண்டாவது அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் பிரம்மபுத்திரா நதியை நம்பியுள்ள மாநிலங்கள் பாதிக்கப்படும். கோடைக்காலங்களில் நீருக்கு பஞ்சமும் மழைக்காலங்களில் அதீத வெள்ளமும் ஏற்படும். எனவே இதனை இந்தியா எதிர்க்கிறது. இந்தியாவுக்கு பிரம்மபுத்திரா நதியிலிருந்து சுமார் 30% குடிநீரும், 40% மின்சாரமும் கிடைக்கிறது. ஆனால் இந்த நதியின் 50% பரப்பு சீனாவில்தான் இருக்கிறது. எனவே சீனா தன்னுடைய இஷ்டத்திற்கு முடிவுகளை எடுத்திருக்கிறது. சீனாவின் இந்த முடிவால் இந்தியா மட்டுமல்லாது வங்கதேசமும் பாதிப்பை சந்திக்கும்.

இந்தியாவின் திட்டம்

இந்தியாவின் திட்டம்

எனவே இதனை தடுக்க இந்தியா 'லோயர் சுபன்சிரி திட்டத்தை' கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அப்பர் சுபன்சிரியில் 11,000 மெகாவாட் (மெகாவாட்) மின்சாரம் தயாரிக்கும் விதமாக அணை கட்ட திட்டமிடப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த அணை கட்டப்பட்டால் சீனா திறந்துவிடும் நீரால் ஏற்படும் வெள்ளத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும். மட்டுமல்லாது வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு குறிப்பிட்ட அளவில் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கும். இதன் மூலம் அம்மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்று சொல்லப்படுகிறது.

 தண்ணீர் பிரச்சினை

தண்ணீர் பிரச்சினை

மேலும் இந்த அணை அசாம் மாநிலத்தின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இந்த கட்டுமான பணிகளை சீக்கிரமாக முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையையும் சீன ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+