For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவுக்கு எதிரான இந்தியாவின் மிகப் பெரிய ஆயுதம் ராணுவம் மட்டும் கிடையாது.. வேற, வேற

சீனாவுக்கு எதிரான மிகப் பெரிய ஆயுதம் ராணுவம் இல்லை, அந்த நாட்டுடனான நமது வர்த்தகம்தான்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவுக்கு எதிரான மிகப் பெரிய ஆயுதம் அதனுடன் நாம் கொண்டுள்ள வர்த்தகமே.

நமது அண்டை நாடான சீனா, பாகிஸ்தானை காட்டிலும் மோசமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. வளரும் நாடானா இந்தியாவின் வளர்ச்சியை எவ்வகையிலாவது தடை செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது.

சீனா நமக்கு எவ்வகையில் எல்லாம் தொல்லை கொடுத்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

சீனா மீது இந்தியர்கள் எரிச்சலடைய காரணம், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வரும் அதன் நட்பு நாடு பாகிஸ்தானை கண்டிக்காததம் ஆும்.

 தடை செய்ய வில்லை

தடை செய்ய வில்லை

ஜெய்ஷ்-ஏ- முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மௌலானா மசூத் அசாரை சீனாவுக்குள் நுழைய தடை விதிக்கவே இல்லை. மேலும் அணு விநியோக குழு நாடுகளில் (என்எஸ்ஜி) இந்தியாவும் உறுப்பு நாடாக சேர சீனா முட்டுக்கட்டை போட்டது.

 பாதுகாப்பு கவுன்சில்

பாதுகாப்பு கவுன்சில்

ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா இடம்பெறவும் பெரும் தடையாக உள்ளது. தற்போது நம்முடன் எல்லை பிரச்சினைக்கு வந்துவிட்டது. இந்தியா- பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த பகுதி பூடானுக்கு சொந்தமானது என்றாலும் அது நமது ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளது. இதனால் டோக்லாம் பகுதியில் சீனா சாலை போடும் பணியை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.

 நீடித்து வரும் பதற்றம்

நீடித்து வரும் பதற்றம்

இரு நாட்டின் தூதரக அதிகாரிகளும் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தாததால் இந்தியா- சீனா எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. சீனாவுக்கு எதிரான இந்தியாவின் ஆற்றல் வாய்ந்த ஆயுதம் நமது ராணுவம் என்றாலும் அதையும் தாண்டி ஒன்று அதுதான் வர்த்தகம்.

 உகந்த தருணம்

உகந்த தருணம்

இந்தியா தனது ஆயுதத்தை பயன்படுத்த வேண்டிய தருணம் தற்போது வந்துவிட்டது என்று இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றன. கடந்த ஆண்டே சீனாவுடனான வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிய போது அந்நாட்டிலிருந்து பொருள்கள் இறக்குமதி செய்வதை நாம் தடை விதிக்க முடியாது. மாறாக சீன வணிகத்தை ஒடுக்கும் வகையில் வரி விதிப்பு செய்யலாம். ஆனால் அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன.

 தடை செய்ய வலுக்கிறது

தடை செய்ய வலுக்கிறது

சீனா தொடர்ந்து இந்தியாவுடன் மோதல் போக்கையே கடைபிடித்து வரும் நிலையில் அந்நாட்டுடனான வர்த்தகத்தை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்துள்ளது. இதுதான் சீனாவுக்கு எதிரான வலிமையான ஆயுதம் என்றும் பரவலாக கோரிக்கைகள் எழுந்துள்ளன.

முழு தடை முடியாது

முழு தடை முடியாது

உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் காரணமாக இறக்குமதிக்கு முழு தடை விதிக்க முடியாது. அதே வேளையில் ஏற்றுமதியை காட்டிலும் சீனாவுடனான இறக்குமதி வர்த்தகத்தை 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இரட்டிப்பாக்க இந்தியா அனுமதித்துள்ளது என்றார்.

 மங்கோலியாவுக்கு தடை

மங்கோலியாவுக்கு தடை

மங்கோலியாவுக்கு வந்த தலாய் லாமாவுக்கு அந்நாடு அனுமதி அளித்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மங்கோலியா நாட்டு லாரிகள் தன் நாட்டு எல்லையை கடக்க சீனா தடை விதித்தது. பின்னர் சீனாவுடன் கருத்து வேறுபாடு கொண்ட லியு ஜியாபோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நார்வீஜியன் சாலமன் மீன்கள் ஏற்றுமதியை கடந்த 2010-ஆம் ஆண்டு தடை செய்தது.

 தென் கொரியாவுக்கும் தடை

தென் கொரியாவுக்கும் தடை

அமெரிக்காவின் வானில் இருந்து எதிரிகளை தாக்கக் கூடிய ஏவுகணையை தென்கொரியா நிலை நிறுத்தியதால் அந்நாட்டின் அழகு சாதன பொருள்களுக்கு தடை விதித்தது. மேலும் மேற்கண்ட செயலை கைவிட வலுயுறுத்தியும் தென் கொரியா கேட்காததால் அந்நாட்டின் லோட்டே நிறுவனத்துக்கு தடை விதித்தது. உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தப்படி, இப்படி தடை விதிக்க முடியாது. இந்தியா உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்தின்பேரில்தான் சீனாவுக்கு எதிராக இறக்குமதிக்கு தடை விதிக்க தயங்குகிறது.

English summary
India's most powerful weapons against China is not the Army. It is trade. Brahma Challaney a well known Geostrategist says that it is time that India must use its most powerful weapon against India-trade as quoted by Business Today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X