For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் முதல் “மீன்” மருத்துவமனை- கொல்கத்தாவில் விரைவில் தொடக்கம்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: இந்தியாவில் மீன்களுக்கான சிறப்பு மருத்துவமனை முதல் முறையாக கொல்கத்தாவில் அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து மேற்கு வங்க கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக் கழகத்தின் மூத்த மீன் நுண்ணுயிரியல் வல்லுநரும், ஆராய்ச்சியாளருமான டி.ஜெ.ஆப்ரகாம் தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் மீன் மருத்துவமனை:

கொல்கத்தாவில் மீன் மருத்துவமனை:

இதன்மூலமாக நாட்டில் முதல் முறையாக கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக் கழகத்தில் மீன்களுக்கான மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

நவீன மருத்துவ வசதிகள்:

நவீன மருத்துவ வசதிகள்:

இதற்கான கட்டிடம், பரிசோதனை கூடங்கள், நவீன மருத்துவ வசதிகளை அமைக்க ரூபாய் 1.7 கோடி நிதி செலவிடப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

மீன்களின் அசாதாரண சூழ்நிலைகள்:

மீன்களின் அசாதாரண சூழ்நிலைகள்:

மொத்தம் 60 முதல் 65 வகையான நோய்களாலும், அசாதாரண சூழ்நிலைகளாலும் மீன்கள் பாதிக்கப்படுகின்றன.

நோய்கள்தான் காரணம்:

நோய்கள்தான் காரணம்:

மீன் இனப்பெருக்கத்தில் மேற்கு வங்க மாநிலம் முதல் இடத்திலிருந்து சரிவதற்கு இத்தகைய நோய்களே காரணம்.

 மீன் உற்பத்தி அதிகரிப்பு:

மீன் உற்பத்தி அதிகரிப்பு:

இந்த மருத்துவமனை மூலம் மாநிலத்தில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதியிலும் மீன் உற்பத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இம்மருத்துவமனைக்கான பணிகள் அடுத்தாண்டு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The country’s first hospital to treat abnormalities and diseases in fish is set to come up in Kolkata by mid-2015, a senior scientist said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X