For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொட்டுவிடும் தொலைவில் டோக்லா பீடபூமி-எந்த நேரத்திலும் சீனா தாக்கும்- போர் பீதியில் எல்லை கிராமம்!

எந்த நேரத்திலும் சீனாவுடனான யுத்தம் வெடிக்கும் நிலையில் உச்சகட்ட போர் பீதியில் இருக்கிறது நாட்டின் எல்லை கிராமமான குப்புப்.

By Mathi
Google Oneindia Tamil News

காங்டாங்: போர் மேகம் சூழ்ந்திருக்கும் டோக்லா பீடபூமியை தொட்டு விடும் தொலைவில் இருக்கும் சிக்கிம் எல்லை கிராமமான குப்புப் மக்கள் கடந்த ஒரு மாதமாக உச்சகட்ட பீதியில் உறைந்து போயுள்ளனர்.

இந்தியா, பூடான், சீனா ஆக்கிரமித்துள்ள திபெத் சந்திக்கும் முச்சந்திப்பில் உள்ளது பூடானின் டோக்லா பீடபூமி. சிக்கிம் தலைநகர் காங்டாங்கில் இருந்து 68 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது குப்புப் கிராமம்.

இதுதான் நாட்டின் சிக்கிம் எல்லையில் உள்ள கடைசி கிராமம். இங்கிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில்தான் போர் பதற்றம் நிலவும் டோக்லா பீடபூமி இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இன்னொரு திசையில் நாதுலா எல்லை இருக்கிறது.

எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என பெரும் பீதியில் இருக்கின்றனர் குப்புப்வாசிகள். வெளிநபர்கள் யாரிடமும் எதுவும் பேசக் கூடாது என அந்த மக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் கண்காணிப்பு

சீனாவின் கண்காணிப்பு

பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே தயக்கம் காட்டுகின்றனர். இந்த கிராமத்தின் எல்லையில் ஒரு போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதில் 'எச்சரிக்கை: சீனாவின் கண்காணிப்பு தொடங்குகிறது" என எழுதப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் தடுப்பு

பத்திரிகையாளர்கள் தடுப்பு

அத்துடன் குப்புப் கிராமத்துக்கு பத்திரிகையாளர்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தவும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தின் வழியாக சீனாவின் சம்பி பள்ளத்தாக்குக்கு இந்தியாவில் இருந்து நாள்தோறும் 100க்கும் அதிகமான சரக்கு வாகனங்கள் செல்லும்.

போர் பீதி தெரிகிறது

போர் பீதி தெரிகிறது

கடந்த ஒரு மாதத்தில் இந்த எணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். குப்புப் கிராம மக்கள் போர் பீதியில் உறைந்து கிடப்பதாகவே அங்கு சென்று பார்வையிட்ட பத்திரிகையாளர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.

பாடம் கற்பிக்கனும்

பாடம் கற்பிக்கனும்

சீனா மிக மோசமாக நடந்து கொண்டு வருவதால் சரியான பாடம கற்பிக்க வேண்டும் என்பதுதான் குப்புப்வாசிகளின் விருப்பமும் கூட.. இத்தனைக்கும் 1962 யுத்த ரணங்களை அனுபவித்தவர்கள் இந்த குப்புப்வாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kuppup is the India's last village which was just before the Bhutan's Doklam. Kuppup Villagers are living with war fear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X