For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4000 கி.மீ வரை பாய்ந்து துல்லியமாக தாக்கும்.. அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி 4 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அக்னி 4 ஏவுகணை 4000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

Google Oneindia Tamil News

புவனேஷ்வர்: அக்னி 4 ஏவுகணை ஆய்வு ஒடிசாவில் இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த அக்னி-4 ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து சென்று 4000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி ஏவுகணைகள் உள்நாட்டிலேயே இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தால் தயாரிக்கப்படுகிறது. அக்னி- 5 ஏவுகணை கடந்த வாரம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.இது வடக்கு சீனா வரை பாயக்கூடிய திறமை பெற்றது.

 India today successfully test fired the Agni IV nuclear capable ballistic missile

இந்நிலையில் அக்னி 4 ஏவுகணையின் இறுதிக்கட்ட ஆய்வு இன்று நடத்தப்பட்டது. இந்த அக்னி 4 ஏவுகணை 20 மீட்டர் நீளம் மற்றும் 17 டன் எடை கொண்டது.

4000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் அப்துல்கலாம் தீவில் இருந்து நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்னி 4 ஏவுகணை விரைவில் இந்திய ராணுவத்தில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
India today successfully test fired the Agni IV nuclear capable ballistic missile that has a range of up to 4,000 km. This missile will be added in Military as soon as possible says DRDO
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X