For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிக்கலான பிரசவம்: பச்சிளம் குழந்தையுடன் தாயை மீட்ட இந்திய விமானப்படை அதிகாரிகள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லே: காஷ்மீரில் லடாக் பகுதியில் 16000 அடி உயரத்தில் சாலை வசதியும், மருத்துவ வசதியும் அற்ற ஒரு மலை கிராமத்தில் சிக்கித்தவித்த தாயையும், பச்சிளம் குழந்தையும் ஹெலிகாப்டர் உதவியோடு மீட்டுள்ளனர் இந்திய விமானப்படையினர்.

லடாக்கின், புவாங் பிர்ஸ்தே பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண் தனது குழந்தையை பிரசவித்த பின்னர் கடுமையான பலியால் பாதிக்கப்பட்டார். உடனடியாக சிகிச்சை பெற்றால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற தருவாயில் இருந்த அவருக்கு மருத்துவ சிகிச்சை பெற எந்த வித வசதியும் புவாங் பிர்ஸ்தே என்ற மலைகிராமத்தில் இல்லை. இதனையடுத்து லே மாவட்ட கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, லே மாவட்ட கமிஷனர், இந்தப் பெண்ணை காப்பாற்றுதாறு இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். கடல் மட்டத்தில் இருந்து 16,200 அடி உயரத்தில் இருந்த மலை கிராமத்தில் தவித்த பெண்ணை ஹெலிகாப்டர் உதவியோடு மீட்க முடிவு செய்யப்பட்டது.

சியாச்சின் பயனியர் குழுவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் மூலம் அந்த இளம் தாயும், பச்சிளம் குழந்தையும் பத்திமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்காக விமானப்படை அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து அவர்களை மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லே பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம், விமானப்படை அதிகாரிகளின் சாகசமும் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.

English summary
In a challenging rescue operation involving a medical emergency, an Indian Air Force (IAF) helicopter successfully evacuated a mother and her new born baby from a remote and inhospitable region of Ladakh at a height of over 16,000 feet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X