For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரொம்ப காய்ச்சல்.. நீங்க வர வேண்டாம்.. ஆந்திர பெண்ணை சீனாவிலேயே விட்டு கிளம்பிய இந்திய விமானம்

Google Oneindia Tamil News

Recommended Video

    காய்ச்சல் அடிச்சதால் விட்டுட்டு போயிட்டீங்களே.. எனக்கு கல்யாணம்ங்க.. சீனாவில் கதறும் ஆந்திர பெண் - வீடியோ

    டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள சீனாவின் வுகான் நகரிலிருந்து, இந்தியா சிறப்பு விமானத்தின் மூலம், இந்தியர்களை அழைத்து வரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    323க்கும் மேற்பட்ட இந்தியர்கள் 2வது விமானத்தில் இன்று தாயகம் திரும்பினர். ஆனால், வுஹான் நகரில் வசிக்கும், ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் அழைத்துவரப்படவில்லை. அவர் அதிக உடல் வெப்பத்துடன் இருந்ததாகவும், எனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதால், அங்கேயே விட்டுவிட்டு வந்ததாகவும், அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

    Indian girl detected with high body temp left out in China

    அவர் தனது குடும்பத்தினருக்கும் இந்திய அரசுக்கும், தன்னையும், இன்னொரு இந்தியரையும் சந்தேகத்தின் காரணமாக வெளியேற்றும் பணியில் இருந்து விலக்கிவைத்துவிட்டு அதிகாரிகள் கிளம்பிவிட்டதாக கூறியுள்ளார். இருப்பினும், அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீன நகரமான வுஹானில் இருந்து 600 க்கும் மேற்பட்ட இந்தியர்களை வெளியேற்றுவதில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாராட்டினார்.

    டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், கடந்த ஐந்து ஆண்டுகளில் "உலகில் எந்த மூலையில் சிக்கலில் இருக்கும் எந்தவொரு இந்தியரையும் காப்பாற்ற இந்தியா தவறியதில்லை" என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

    English summary
    Andhra Pradesh girl says, she was detected with high body temp left out in China during evacuation process.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X