For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"இந்திய கடற்படைக்கு இது போதாத காலம்"- தொடரும் துர்சம்பவங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 7 மாதங்களில் கிட்டதட்ட தொடர்ந்து நடந்த பத்து துர்சம்பவங்களால் ஆடிப் போயுள்ளது இந்திய கடற்படை.

கடற்படை தலைமை தளபதி டி.கே ஜோஷி ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பல் விபத்திற்கு பின்பு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இது கடற்படை சந்தித்த 10வது சம்பவம் ஆகும்.

இதற்கு முன்பு மிகப்பெரிய வெடிவிபத்து மற்றும் தீவிபத்தானது இந்தியாவின் மிக முன்னேற்றமடைந்த டீசல்-எலெக்ட்ரிக் நீர்மூழ்கியை அழித்தது.இதில் கிட்டத்தட்ட 18 பேர் மரணமடைந்தனர்.

Indian Navy's 10 mishaps in last seven months..

ஒரு சிறிய தீ விபத்தானது இந்தியாவின் ஒரே ஒரு விமானம் தாங்கிய நீர்மூழ்கியான ஐ.என்.எஸ் விராட்டில் ஏற்பட்டது.இது கிட்டதட்ட 50 வருட பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு தீவிபத்து ஐ.என்.எஸ் கொன்கனில் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்டு மிகக்கடுமையான இழப்புகளை ஏற்படுத்தியது.

ஐ.என்.எஸ் தல்வாருடன் இணைந்த ஒரு மீன்பிடி படகானது மகாராஷ்டிர மாநில ரத்னகிரிக்கு அருகில் விபத்துக்குள்ளானது,இதில் 4 மீன்பிடியாளர்கள் படுகாயமடைந்தனர்.

ஆயுத கப்பலான ஐ.என்.எஸ் விபுலின் முக்கியமான பகுதியில் பெரிய ஓட்டை ஏற்பட்டது.அதன் பின் சரி செய்யப்பட்டு அபாயம் தவிர்க்கப் பட்டது.

ஐ.என்.எஸ் சிந்துகோஷ் நீர்மூழ்கி மும்பை துறைமுகத்தில் மோதுவது போலச் சென்ற போது அதிர்ஷ்டவசமாக அலை குறைந்ததால் மிக நெருங்கிய ஆபத்தில் இருந்து தப்பித்தது.

பிரம்ம புத்ராவை தாங்கும் ஐ.என்.எஸ் பேட்வா நீர்மூழ்கி பெயர் தெரியாத பொருளால் கடலுக்கு அடியில் சேதமானது.

தற்போது கடற்படை ஐ.என்.எஸ் சிந்துரத்னா மும்பை கடற்கரையில் விபத்துக்குள்ளானதில் 7 கடற்படையினர் படுகாயமடைந்தனர்.இரண்டு கடற்படை அதிகாரிகள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் இந்திய கடற்படை இந்த தொடர் மரணங்களாலும், சம்பவங்களாலும் நிலைகுலைந்து போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்க உண்மை.

English summary
Navy Chief Admiral DK Joshi has resigned after an accident onboard submarine INS Sindhuratna off Mumbai coast early on Wednesday. This was the 10th mishap involving an Indian Navy warship in the last seven months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X