"அப்படியெல்லாம் பண்ண சொல்றாரு".. செக்ஸ் டார்ச்சர் தந்த NRI காதல் கணவன்.. அலறிய பெண்.. தகித்த போலீஸ்
காந்திநகர்: இயற்கைக்கு மாறான வழியில் உடலுறவுக்கு வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது தன்னை தாக்கியதாகவும் குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது என்ஆர்ஐ(NRI) கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்தவர் இளம்பெண் மீர(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரும் கடந்த 2016ம் ஆண்டு பெங்களூரில் சந்தித்துள்ளனர். அப்போது இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு தொடர்ந்து செல்போனில் பேசி ஒருவருக்கொருவர் நன்கு நண்பர்களாகியுள்ளனர். இப்படியே போய்க்கொண்டிருந்தபோது திடீரென ஒருநாள் ஆஸ்திரேலியா இளைஞர் மீராவை காதலிப்பதாக கூறியுள்ளார்.
முதலில் சற்று தயங்கிய மீரா பின்னர் காதலுக்கு ஒப்புக்கொண்டார். இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை லிவிங் உறவு முறையில் வாழ்ந்துள்ளனர். அதன் பின்னர் பெற்றோர்களிடத்தில் விஷயத்தை கூறியபோது பிரச்னை தலைதூக்கியுள்ளது. இருவர் வீட்டிலும் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே இருவரும் பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

திருமணம்
ஆனால் அதற்கும் சட்ட சிக்கல்கள் மேலெழுந்துள்ளன. ஆஸ்திரேலிய இளைஞரின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் இந்த திருமணத்தை எதிர்ப்பதாகவும், திருமணம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தனர். ஆனால் நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் இருவருக்கும் 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் இவர்கள் இருவரும் இந்தியாவிலேயே தங்கியுள்ளனர். அப்போது சில பிரச்னைகள் எழுத்திருக்கிறது. அதவது ஆஸ்திரேலிய இளைஞர் தனது மனைவி மீராவை இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட வலியுறுத்தியுள்ளார்.

உடலுறவு
இதற்கு மீரா ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை எழுந்திருக்கிறது. இந்த சண்டைக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு போக இளைஞருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இவருக்கு புதிய வேலை கிடைத்த நிலையில் தனது மனைவி மீராவையும் அழைத்துக்கொண்டு ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். அங்கு சென்றதும் பழைய நண்பர்கள், உறவினர்களை சந்தித்த அவர் பயங்கர குஷியில் இருந்திருக்கிறார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். மீண்டும் மனைவியை இயற்கைக்கு மாறாக உடலுறவில் ஈடுபட வலியுறுத்தியுள்ளார்.

தாக்குதல்
ஆனால் அதற்கு மனைவி மீரா இணங்கவில்லை. மறுப்பு தெரிவித்ததற்காக மீராவை அந்த நபர் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மீராவுக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலியாவில் கணவரின் வீட்டிலும் இனவெறி தலைதூக்கியுள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கணவரின் குடும்பத்தினர் மீரா மீது இனவெறி தாக்குதல்களை தொடுத்திருக்கிறார்கள். முக்கிய நிகழ்வுகளிலிருந்து புறக்கணிப்பது, அதிகமாக வேலை வாங்குவது என தாக்குதல்கள் தொடர்ந்திருக்கின்றன. இந்நிலையில், திடீரென ஒருநாள் கணவருக்கும் மீராவுக்கும் இடைய சண்டை பெரியதாக வெடித்திருக்கிறது.

புகார்
இதனையடுத்து இவருக்கு கடந்த ஜூலை 30ம் தேதியன்று விவாகரத்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மீரா என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருக்கிறார். பின்னர் இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு அங்கிருந்து பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளார். இதனையடுத்து தனது வெளிநாட்டு கணவர் மீது மீரா அகமதாபாத்தின் சாட்டிலைட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications