ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள்... எந்தத் தகவலும் இல்லை என்று மத்திய அரசு கைவிரிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : ஈராக்கில் 3 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பது உறுதிபடத் தெரியவில்லை என்று இந்த நாட்டின் வெளியுறஹவுத் துறை அமைச்சர் இப்ராஹிம் அல் ஜபாரி கூறியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு 39 இந்தியர்கள் ஈராக்கில் கடத்தப்பட்டதாக தகவல்க் வெளியாகின. இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் இன்னும் தெளிவாக வெளியாகவில்லை. இவர்கள் அனைவரும் கடத்தப்பட்டு மொசூல் அருகே பாதுஷா சிறையில் அடைக்கப்பட்டதாகவும், இந்த சிறையை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்ரவாதிகள் தகர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் சுஷ்மா தவறான தகவல்களை தருவதாக எதிர்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளன.

லோக்சபாவிலும் அகாலிதளம் உள்ளிட்ட கட்சியினர் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்தன. இந்நிலையில்
இந்தியா வந்துள்ள, ஈராக் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் ஜபாரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் இப்ரராஹிம் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 39 இந்தியர்கள் குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. காணாமல் போன 39 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டனரா என்று எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று இப்ராஹிம் அல் ஜபாரி தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Foreign minister of Iraq says that searches are going on still to find out the missing 39 Indians in Iraq and also added there is no evidence that they are killed or alive.
Please Wait while comments are loading...