For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைக்கப் போகும் இஸ்ரேலிய நிபுணர்கள் குழு

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஏரிகளை சுத்தம் செய்ய, நீரை சேமிக்க இஸ்ரேலிய நிபுணர்களின் உதவியை நாட உள்ளது கர்நாடக அரசு.

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துவிட்டதால் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடாக உள்ளது. பெங்களூர் நகரில் உள்ள ஏரிகள் பல மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

Israeli team will help Bengaluru ease water woes

இந்நிலையில் பெங்களூரில் உள்ள ஏரிகளை சுத்தம் செய்ய, நீரை சேமிக்க இஸ்ரேலிய நிபுணர்களின் உதவியை நாட உள்ளது கர்நாடக அரசு. நீர் சேமிப்பு குறித்து இஸ்ரேலிய நிபுணர்கள் குழுவை சந்தித்து பேசிய கர்நாடக அரசு அவர்களை பணியமர்த்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து இஸ்ரேலிய நிபுணர் உரி ஸ்கோர் கூறுகையில்,

நீரை சேமிக்குமாறு பிரச்சாரம் செய்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பிரச்சாரத்தை முறையாக செய்து வெற்றி கண்டால் நகரின் தண்ணீர் பயன்பாட்டை 20 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றார்.

தண்ணீரை சேமிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். வறட்சியாக உள்ள நிலையில் இது மிகவும் முக்கியம் என இஸ்ரேலிய நிபுணர்கள் கர்நாடக அரசிடம் தெரிவித்துள்ளனர்.

பெல்லந்தூர் ஏரி மிகவும் மோசமாக மாசடைந்து இருப்பதால் மக்கள் அரசு மீது கோபம் அடைந்த நிலையில் இஸ்ரேலிய நிபுணர்களின் உதவி நாடப்பட உள்ளது.

English summary
A team of Israeli experts are likely to be roped in to ensure water conservation and clean lakes in Bengaluru city. The government of Karnataka which met with a team of Israeli experts is likely to take a call on utilising their services to ensure that water is better conserved.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X