விண்ணில் பாய்ந்தது பிஎஸ்சிஎல்வி - சி40.. 100வது செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இஸ்ரோவால் இந்தியாவின் 100வது செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-40 மூலம் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

உலகில் இருக்கும் பல நாடுகளின் செயற்கைக்கோள் தற்போது இஸ்ரோ அமைப்பின் மூலம் ஏவப்படுகிறது. அந்த அளவிற்கு நாம் விண்வெளி துறையில் முன்னேறி இருக்கிறோம்.

ISRO launches it's 100th satellite today

இந்தநிலையில் இன்று பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்து இருக்கிறது. இந்த ராக்கெட் கார்டோசாட் -2 செயற்கைக்கோளைத் தாங்கிச் சென்று இருக்கிறது. இது இந்தியாவின் 100வது செயற்கைகோள் ஆகும்.

இதன் எடை 710 கிலோ ஆகும். இதில் நிறைய நேனோ மற்றும் மைக்ரோ செயற்கைக்கோள்கள் இருக்கிறது. அனைத்து செயற்கைக்கோளையும் சேர்த்து இதன் மொத்த எடை 1,323 கிலோ ஆகும்.

சரியாக இன்று காலை 9:28 மணிக்கு பிஎஸ்எல்வி சி-40 ஏவப்பட்டது. இதற்கான கவுண்டவுன் நேற்று அதிகாலையே துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ISRO launches it's 100th satellite today

பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட்டில் மூலம் கனடா, கொரியா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டது. மொத்தமாக 31 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டு உள்ளது.

பூமியின் இயற்கை வளங்களை கண்காணிப்பதற்காக கார்டோசாட் -2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இதில் நிறைய புதிய தொழில்நுட்பங்கள் இடம்பிடித்து இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ISRO has launched it's 100th satellite today morning from Sriharikota. The PSLV c-40 has launched exactly at 9.28. Cartosat - 2 is the 100th satellite of ISRO.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற