For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திராயன்-2 ரெடி.. இந்த வருடம் விண்ணில் ஏவப்படும்.. அடுத்த இன்னிங்க்ஸுக்கு தயாரான இஸ்ரோ!

சந்திராயன்-2 இந்த வருடம் நிலவிற்கு ஏவப்படும் என்று இஸ்ரோ அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: சந்திராயன்-2 இந்த வருடம் நிலவிற்கு ஏவப்படும் என்று இஸ்ரோ அமைப்பு தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் நிலவில் நிறைய ஆராய்ச்சிகளை செய்ய இஸ்ரோ அமைப்பு திட்டமிட்டு இருக்கிறது.

இந்த திட்டத்தின் பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடையும்.இது நிறைய எதிர்கால திட்டங்களை கருத்தில் கொண்டு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இது நிலவு ஆராய்ச்சியில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எதிர்காலத்தில் இஸ்ரோ நிலவிற்கு மனிதனை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது.

சந்திராயன்-1 ஆராய்ச்சி

சந்திராயன்-1 ஆராய்ச்சி

நிலவில் ஆராய்ச்சி செய்ய இந்தியா சந்திராயன்-1 விண்கலத்தை அனுப்பியது. நிலவின் வட்டப்பாதையில் சந்திராயன்-1 விண்கலத்தை சரியாக நிலை நிறுத்தி சாதனை செய்தது. மிகவும் குறைந்த செலவில், அறிவியல் கணிப்புகளை வைத்து மட்டுமே சந்திராயன்-1 செயல் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்ட்டது.

சந்திராயன்-2 ஆராய்ச்சி

சந்திராயன்-2 ஆராய்ச்சி

தற்போது நிலவுக்கு சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதில் விண்கலம் மட்டும் இல்லாமல் சிறிய அளவில் ரோபோ போன்ற 'ரோவர்' ஒன்று அனுப்பப்பட இருக்கிறது. சந்திராயன்-2 ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டு அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

செலவு ஆனது

செலவு ஆனது

இதை உருவாக்க மொத்தமாக 800 கோடி வரை செலவு ஆகி இருக்கிறது. சென்ற வருடம் முழுக்க இஸ்ரோ இதன் தயாரிப்பு பணியில்தான் ஈடுப்பட்டு இருந்தது. அதே சமயத்தில் 104 சாட்டிலைட் தங்கிய விண்கலம் அனுப்பியது என உதிரி சாதனைகளும் இந்தியா செய்தது.

எப்போது ஏவப்படும்

எப்போது ஏவப்படும்

இந்த சந்திராயன் 2 ஏப்ரல் இறுதியில் ஏவப்படும் என்று அமைச்சர் டாக்டர்.ஜித்தேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அப்போது கால நிலை சரியாக இருக்காது என்பதால் அக்டோபர் மாதம் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்து இருக்கிறார்.

English summary
ISRO plans to send Chandrayaan-2 by this year. India's first moon mission has named as Chandrayaan-1. Initially ISRO is setting up to land its very first lunar rover by the end of OCT 2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X