சோனியாவை எதிர்த்து அஜய் அகர்வால்; ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி போட்டி: பாஜக அறிவிப்பு
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து அஜய் அகர்வாலும் துணைத் தலைவர் ராகுலை எதிர்த்து நடிகை ஸ்மிருதி இரானியும் போட்டியிடுவர் என்று பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 7-வது பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் 5 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அஜய் அகர்வால் நிறுத்தப்பட்டு உள்ளார்.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் தொலைக்காட்சி நடிகை ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். இவர் தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார்.
மேலும் பண்டா தொகுதியில் பைரோன் பிரசாத் மிஸ்ரா போட்டியிடுகிறார். தமிழகத்தின் வேலூர் தொகுதியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். தஞ்சை தொகுதி வேட்பாளராக கருப்பு எம்.முருகானந்தம் அறிவிக்கப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications