For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் பார்த்தேன்.. அருண் ஜெட்லியும், விஜய் மல்லையாவும் 15 நிமிஷம் பேசுனாங்க.. 'ஐ விட்னஸ்' அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    அருண் ஜெட்லீக்கு மேலும் ஒரு புது சிக்கல்- வீடியோ

    டெல்லி: அருண் ஜேட்லியை, விஜய் மல்லையா சந்தித்து பேசியதை காங்கிரஸ் தலைவர் ஒருவர் நேரில் பார்த்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    Jaitley-Mallya meeting true, check CCTV, says Congress MP

    டெல்லியில் நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி மேலும் கூறியதாவது: மல்லையாவை சந்திக்கவில்லை என்று அருண் ஜேட்லி பொய் சொல்கிறார். இருவரும் சந்தித்து பேசியதை காங்கிரஸ் தலைவர் பி.எல்.புனியா பார்த்துள்ளார். அது 15-20 நிமிட நேர சந்திப்பு. அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதுபற்றி நாட்டு மக்களுக்கு அருண் ஜெட்லி விளக்கம் தெரிவிக்க வேண்டும்.

    Jaitley-Mallya meeting true, check CCTV, says Congress MP

    கிரிமினலுடன் நிதி அமைச்சர் ஆலோசனை செய்தது ஏன், என்ன விவாதிக்கப்பட்டது? ஏன் சிபிஐயிடமோ, போலீசிடமோ தெரிவிக்கவில்லை. அப்படியானால், அங்கே ஒரு டீல் நடந்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    Jaitley-Mallya meeting true, check CCTV, says Congress MP

    இதையடுத்து காங்கிரஸ் எம்.பி., பி.எல்.புனியா நிருபர்களிடம் கூறுகையில், 2016ம் ஆண்டு மார்ச் மாதம், நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் விஜய் மல்லையா மற்றும் அருண் ஜேட்லி பேசிக்கொண்டிருந்தனர். நானும் அந்த பகுதியில் இருந்தேன். ஒரு மூலையில் இருவரும் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். சுமார் ஐன்தாறு நிமிடங்கள் பிறகு, அவர்கள் அமர்ந்தபடி பேசினர். நான் தவறாக கூறியிருந்தால் சிசிடிவி காட்சிகளை செக் செய்து பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த சந்திப்புக்கு பிறகே மல்லையா இங்கிலாந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

    நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன் என விஜய் மல்லையா லண்டனில் நிருபர்களிடம் கூறினார். இதை அருண் ஜெட்லி மறுத்தார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் அளித்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்தது.

    English summary
    Vijay Mallya and Finance Minister Arun Jaitley were witnessed by a Congress leader having a discussion in parliament just two days before the fugitive tycoon's flight to the UK, Rahul Gandhi alleged today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X