அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு ராணுவம் பதிலடி.. காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காமில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் பாதுகாப்பு படையினர் கைபற்றியுள்ளனர்.

காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 யாத்ரீகர்கள் பலியாகினர். இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவம் தொடங்கியது.

Jammu and Kashmir: 3 terrorists killed in encounter in Budgam

புத்காம் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களும், வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் தொடர்ந்து தீவிரமான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
At least three Hizbul Mujahideen militants were killed in an encounter in Budgam that began on Tuesday evening.
Please Wait while comments are loading...