ஜம்மு காஷ்மீர்: 26 தொகுதிகளுக்கு செப்.25-ல் 2-வது கட்ட தேர்தல்- 310 பேர் வேட்பு மனுத் தாக்கல்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் மொத்தம் 310 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஶ்ரீநகர் மாவட்டத்தில் மட்டும் 112 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். பட்காம் மாவட்டத்தில் 68, ரஜோரி மாவட்டத்தில் 47, பூஞ்ச் மாவட்டத்தில் 35,ரேசி மற்றும் கந்தெர்பல் மாவட்டங்களில் தலா 24 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த 24 தொகுதிகளுக்கு 279 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இறுதியாக மொத்தம் 244 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மாதம் ஆகஸ்ட் 29-ந் தேதி தொடங்கியது. இந்த வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. 2வது கட்ட தேர்தல் 26 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த 26 தொகுதிகளுக்கு மொத்தம் 310 பேர் 329 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
பாகிஸ்தானுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஶ்ரீநகர் மாவட்டத்தில் 112, பட்காம் மாவட்டத்தில் 68, ரஜோரியில் 47, பூஞ்ச்சில் 35, ரேசி 24, கந்தெர்பாலில் 24 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரேசி மாவட்டத்தில் மொத்தம் 3 தொகுதிகள் உள்ளன. குல்பர்க் தனித் தொகுதியில் 7 பேரும் ரேசியில் 10 பேரும் ஶ்ரீ மாதா வைஷ்ணோ தேவி தொகுதியில் 7 பேரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் மொத்தம் 5 தொகுதிகளில் உள்ளன. மற்றொரு எல்லை மாவட்டமான பூஞ்ச்சில் 3 தொகுதிகள் உள்ளன. ஶ்ரீநகர் மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
2-வது கட்ட தேர்தலுக்கு தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 9-ந் தேதி கடைசி நாள். இதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications