காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் அருகே துப்பாக்கி சூடு சத்தம்.. தீவிரவாதிகள் தாக்குதல் என பீதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர் : ஜம்முவில் ராணுவ முகாம் மீது திவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

ஜம்முகாஷ்மீரின் பிஜ்பேஹரா பகுதி அனந்த்நாக் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இங்கு சிஆர்பிஎஃப் மற்றும் ராணுவ முகாம் அமைக்கப்பட்டு வீரர்கள் அங்கு தங்கிவருகின்றனர்.

Jammu police clarifies that no attack on Jammu valley's Bijbehara army troop

தீவிரவாதிகள் இந்த முகாம் மீது திடீரென தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் பதிலடி கொடுப்பதாகவும் உயிர்ப்பலி குறித்து தகவல் இல்லை என்றும் அந்தப் பகுதியில் பயங்கர துப்பாக்கிச் சூடு நடக்கும் சத்தம் கேட்டு வருவதாக கூறப்பட்டது.

ஸ்ரீநர் ஜம்மு காஷ்மீர் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் இந்த ராணுவ முகாம் அமைந்துள்ளது. ஆனால் வீரர்கள் பயிற்சியின் போது துப்பாக்கிச் சுடும் சத்தத்தை கேட்டு தவறான தகவல் பரவி விட்டதாகவும் நிலைமை தீவிரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்றும் ஜம்மு போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும், ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். அதிகாலையில் நடைபெற்ற ராணுவ வீரர்களின் பயிற்சியின் போது கேட்கப்பட்ட துப்பாக்கிச் சத்தத்தை கேட்டு மக்கள் பீதியடைந்ததாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jammu and Kashmir's police clarified that there is no Terrorists attack in Bijbehara where CRPF and Army troops are stationed.
Please Wait while comments are loading...