For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவர் மோடி பிரதமராக புனித பயணம், விரதம் இருக்கும் ஜசோதா பென்

By Siva
Google Oneindia Tamil News

குஜராத்: கணவர் பிரதமராக வேண்டி, விரதம், புனித பயணம் என மேற்கொண்டுள்ளாராம் மோடியின் மனைவி ஜசோதா பென்.

பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, இதுவரை தான் திருமணம் ஆனவர் என்றோ, தனது மனைவி பெயர் இது என்றோ பகிரங்கமாக அறிவித்தது இல்லை.

கடந்த 2012ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடி போட்டியிட்டபோதுகூட தனது வேட்பு மனு தாக்கலின் போது அளித்த பிரமாண பத்திரத்தில் மனைவி பற்றிய பகுதியை நிரப்பாமல் வெற்றிடமாக விட்டிருந்தார்.

'Jashodaben, Narendra Modi's wife, on char dham yatra'

ஆனால் சமீபத்தில், மோடி மணமானவர், அவருக்கு 17 வயதில் திருமணமானது, அவரது மனைவி ஜசோதா பென் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை என தகவல்கள் வெளியாகின. இதனால் ஒரே நாள் இரவில் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளார் ஜசோதா பென். ஊடகவியலாளர்களின் பார்வையில் இருந்து தப்பிக்க தற்போது புனித பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஒய்வு பெற்ற ஆசிரியர்

ஜசோதா பென் சிமன்லால் மோடி ஒரு ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் அவரது 17வது வயதில் மோடியை திருமணம் செய்து கொண்டார். கடந்த 3 வருடங்களாக தனியாக வசித்து வருகிறார்.

இவருக்கு ரூ 14,000 மாத ஓய்வூதிய பெறுகிறார். பெரும்பாலும் தனது சகோதரர்களின் வீட்டில் வசித்து வருகிறார். வாழ்கிறார்.

ஆசிரியப்பணி

தனது 2 வயதில் தாயை இழந்த இவர் மோடியை தனது சொந்த கிராமமான வாட்நகரில் திருமணம் செய்து கொண்டார் திருமணத்தின் போது அவர் வெறும் 7-ம் வகுப்புதான் படித்து இருந்தார். தனது கல்வியை தனது கணவர் கேட்டு கொண்டதற்கு இணங்க அவரது வீட்டிற்கு சென்று படித்து முடித்தார். 1974 இல் அவருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைத்தது.1976 இல் ஆசிரியர் பயிற்சி முடித்தார். 1978 இல் அவருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது.

சகோதரர்களின் உதவியோடு

ரோபால் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து பள்ளிக்கு மாற்றபட்டார். அங்கு 12 வருடங்கள் பணிபுரிந்தார். ஓய்விற்குப் பின்னர் 2 சகோதரர்கள் ஜசோதாவின் வாழ்க்கைக்கு உதவுகிறார்கள்.

கொடுத்து வைக்கவில்லை

ஜசோதா பென் கூறும் போது மோடிக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் அமைய விரும்புவதாக கூறினார்.மேலும் தனது விதி மற்றும் கெட்ட நேரம் மோடியுடன் வாழ முடியவில்லை என கூறியுள்ளார்.

மனைவி என்ற அங்கீகாரம்

குஜராத்முதல்வர் நரேந்திர மோடியுடன் மனைவி என்ற அந்தஸ்தோடு வாழத்தான் கொடுத்து வைக்கவில்லை. தற்போது அவர் தன்னை தன் மனைவி என்று ஒத்துக்கொண்டதே மகிழ்ச்சிதான் என்று கூறியுள்ளார் ஜசோதா பென்.

புனித பயணம்

ஜசோதா பென்னின் சகோதரர் கமலேஷ், ஊஞ்சா கிராமத்தில் சிறிய கடை ஒன்றினை நடத்தி வருகிறார். கணவர் மோடி பிரதமராக வேண்டி 40 பெண்களுடன் இணைந்து ஜசோதா, சார்தாம் யாத்திரை சென்றுள்ளதாகவும் அவரது சகோதரர் கூறியுள்ளார்.

45 ஆண்டுகளுக்குப் பிறகு

மோடி - ஜசோதா இடையேயான திருமணம் 1968ம் ஆண்டு நடைபெற்றது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை மனைவி என்று உலகத்திற்கு வெளிப்படுத்தியதற்கு உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நாளுக்காகத்தான் தன் சகோதரி காத்துக் கொண்டிருந்தார் என்றும் அவர் கூறினார்.

4 மணி நேர பிரார்தனை

குஜராத் முதல்வரின் மனைவியாக இருந்தும் எளிமையாகவே வாழ்ந்து வரும் ஜசோதா, தினசரி அதிகாலை 4 மணிக்கு எழுந்து, 11 மணிவரை தனது இஷ்ட தெய்வமான துர்கா தேவியை பிரார்தனை செய்வார் என்கிறார் அவரது தோழி. தினசரி தனது கணவரைப் பற்றி செய்திகளை தவறாமல் படிப்பார். டிவியில் பார்ப்பார்.

நிச்சயம் பிரதமராவார்

முதல்வராக இருக்கும் கணவர் ஒருநாள் கண்டிப்பாக பிரதமர் நாற்காலியில் அமர்வார் என்பதில் ஜசோதாவிற்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு என்கிறார் மோடியின் சகோதரி வசந்தி.

English summary
The 62-year-old wife of BJP's prime ministerial candidate had confessed to her colleagues upon her retirement some years back that though she did not expect anything from her husband, she at least wanted him to acknowledge her once as his wife. In fact, close relatives said she had given up eating rice for some months now as a penance to see Modi as PM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X