For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயிருக்குப் போராடிய நிலையிலும் காவிரி குறித்து விவாதித்தாராம் ஜெ... சொல்கிறது தமிழக அரசு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சைகள் குறித்த அறிக்கை டெல்லியில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது காவிரி பிரச்சினை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி அவர் மரணமடைந்தார்.

(ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்)

jayalalithaa discuss about cauvery issue in apollo

இதனிடையே ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் வந்து சிகிச்சை அளித்தனர். . அப்போது அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் தமிழக அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனர்.

அந்த அறிக்கைகளில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முழு விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை துணை இயக்குனர் சீனிவாஸ் இந்த 5 அறிக்கைகளையும் அளித்துள்ளார்.

அதில் ஜெயலலிதா, நீர்ச்சத்து, நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். செப்.22 ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அவர் மயக்க நிலையில் இருந்தார். அவரை அழைத்து வர ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் நல்ல முறையில் சகிச்சை அளித்துள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும், காவிரி பிரச்சினை குறித்தும் விவாதித்தார் என்றும்அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Formenr chief minister jayalalithaa discuss about cauvery issue while she was admitted in apollo hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X