சுஷ்மாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி அழைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அமெரிக்கா வருமாறு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் முதலாவது வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் நேற்று பொறுப்பேற்றார். அவருடன் அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும் எரிசக்தித் துறை உள்ளிட்ட துறைகளில் புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது சுஷ்மா ஸ்வராஜை அமெரிக்கா வருமாறு ஜான் கெர்ரி அழைப்பு விடுத்தார்.












Click it and Unblock the Notifications