Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜோஷிமத் மட்டுமில்லை.. ஒட்டுமொத்த பள்ளத்தாக்கிற்கும் பேராபத்து.. ஆண்டுக்கு 7 செமீ புதைகிறது! பகீர்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் தொடர்ந்து மண்ணுக்குள் புதைந்து வரும் நிலையில், இது தொடர்பாக ஆய்வாளர்கள் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதாவது ஜோஷிமத் நகரம் ஆண்டுக்கு சில இன்ச்கள் புதைந்து வருவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இமயமலை அருகே உத்தரகண்ட்டில் அமைந்துள்ள நகரம் ஜோஷிமத். இமயமலை ஏற வருவோர்களுக்கும் ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கும் ஜோஷிமத் நகர் தான் நுழைவாயிலாக இருக்கிறது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த நகருக்குப் பொதுமக்கள் விசிட் அடித்து வருகிறார்கள். இப்படி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்.. பல அண்டை நகரங்களில் இருந்தும் பிழைப்பிற்கு ஜோஷிமத் வருகிறார்கள்.

ஜோஷிமத்

ஜோஷிமத்

இதனால் கட்டுமானங்கள் அங்குத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது முதலில் யாருக்கும் பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால், இப்போது அதுதான் நகரைப் புதைய வைத்துள்ளது. சுமார் 1890 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த ஜோஷிமத் நகரில் சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். திட்டமிடப்படாத மற்றும் கண்மூடித்தனமான வளர்ச்சியே ஜோஷிமத் நகரை மிகப் பெரிய ஆபத்தில் தள்ளியது. கடந்த வாரம் ஜோஷிமத் நகரில் இருக்கும் முக்கிய சாலைகள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்படத் தொடங்கியன. அங்கிருந்த கோயிலும் கூட அப்படியே சரிந்தது விழுந்தது.

 ஆண்டுக்கு சில இன்ச்

ஆண்டுக்கு சில இன்ச்

நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் கூட இதனால் நகரமே அழியும் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஜோஷிமத் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது ஜோஷிமத் நகரமும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் ஆண்டுக்கு 6.5 செ.மீ அதாவது 2.5 இன்ச் என்ற அளவுக்கு மண்ணுக்குள் புதைந்து வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இரண்டு ஆண்டுகளாக இந்திய ரிமோட் சென்சிங் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. சாட்டிலைட் தரவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

 நிலைமை மோசம்

நிலைமை மோசம்

இந்த பகுதி அதிக டெக்டோனிக் செயல்பாட்டைக் கொண்ட ஒரு பகுதியாகும். மேலும், இப்பகுதி மண் மிகவும் சென்சிடிவ் ஆனது. சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள முக்கிய சாலைகளில் ஏற்பட்ட விரிசல்கள் நிலைமை மோசமாக்கியது. ஆனால், இந்த பிரச்சினை ஜோஷிமத் நகருடன் முடிந்துவிடவில்லை.. ஜேஷிமத் நகருக்கு 90 கிமீ தொலைவில் உள்ள நகரிலும் இதே பிரச்சினை ஏற்படத் தொடங்கியுள்ளது. அங்குள்ள கட்டிடங்களிலும் விரிசல்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது. என்டிபிசியின் தபோவன் திட்டம் நிலைமையை மோசமாக்கியதாக ஜோஷிமத் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 ஒட்டுமொத்த பள்ளத்தாக்கும்

ஒட்டுமொத்த பள்ளத்தாக்கும்

ஜூலை 2020 முதல் மார்ச் 2022 வரை சேகரிக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் இந்த முழுப் பகுதியே மெல்லப் புதைவதைத் தெளிவாக காட்டுகிறது. இந்திய ரிமோட் சென்சிங் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் ஜோஷிமத் நகரம் மட்டுமில்லாமல்.. ஒட்டுமொத்த பள்ளத்தாக்கு பகுதியே புதையும் அபாயத்தில் உள்ளது தெரிகிறது. இந்த மோசமான பாதிப்பு காரணமாக ஜோஷிமத் நகரில் இருந்து பொதுமக்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு வாடகையும் அரசே அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோபம்

கோபம்

அங்கு விரிசல் விழுந்து ஆபத்தான நிலையில், இருந்த வீடுகளை இடிக்கும் பணிகளை இன்றில் இருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், இதற்கு வீட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று பணிகள் தொடங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அரசின் இந்த திடீர் நடவடிக்கை உள்ளூர் மக்களை மட்டுமில்லாமல் பக்தர்களையும் பாதித்துள்ளது. அரசு முன்கூட்டியே இது பற்றி எதுவும் தெரிவிக்காததால் எங்குத் தங்க வேண்டும் என்றே தெரியாமல் குழம்பிப் போய் உள்ளனர். இதனால் அங்குக் குழப்பமான ஒரு சூழலே நிலவி வருகிறது.

 மக்கள் பாதுகாப்பு

மக்கள் பாதுகாப்பு

இது குறித்து மத்திய இணை அமைச்சரும் உத்தரகண்ட்டை சேர்ந்தவருமான அஜய் பட் கூறுகையில், "பொதுமக்கள் கடினமாக வேலை செய்து இந்த பணத்தைச் சம்பாதித்து உள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இப்போது அனைத்தையும் விடப் பொதுமக்களின் உயிர் தான் முக்கியம்... பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறார். அதிகாரிகள் உடனடியாக சம்ப இடத்திற்கு விரைந்துள்ளனர். ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தவிர, 678 வீடுகள் தற்போது ஆபத்தில் உள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+