• search

உங்களுக்கு உதவ சொல்லி போன் வந்தது.. என்ன செஞ்சிடலாமா?.. லாலுவிற்கு கிடுக்குபிடி போட்ட நீதிபதி!

By Shyamsundar
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
   லாலுவை கோர்த்துவிட்ட அவரது நலம் விரும்பிகள்! கோபத்தில் நீதிபதி- வீடியோ

   ராஞ்சி: லாலு பிரசாத் மீது மாட்டுத் தீவன ஊழல் வழக்கு தொடுக்கப்பட்ட போது பிறந்த ஒரு குழந்தை இப்போது கண்டிப்பாக கல்லூரி படித்து முடித்து இருக்கும். அந்த அளவிற்கு இந்த வழக்கு இந்திய வரலாற்றில் நீளமாக இழுக்கப்பட்டு இருக்கிறது.

   கடந்த 21 வருடங்களாக நடத்த இந்த வழக்கு பல முக்கிய படிப்பினைகளை நாட்டிற்கு வழங்கி இருக்கிறது. இவ்வளவு வருடம் இழுக்கப்பட்டாலும் கடைசியில் லாலு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுவிட்டார்.

   இவரது தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் நேற்றைய ராஞ்சி சிறப்பு நீதிமன்ற அமர்வில் நீதிபதி சிவபால் சிங் மிக முக்கியமான விஷயங்கள் சிலவற்றை பேசினார்.

   காக்க வைத்தார்

   காக்க வைத்தார்

   கடந்த மூன்றாம் தேதியே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அன்று இந்த வழக்கில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் விந்தேஷ்வரி பிரசாத் திடீரென மரணமடைந்தார். இதனையடுத்து, லாலு உட்பட 16 பேருக்கான தண்டனை விபரங்கள் நேற்று அறிவிக்கப்படும் எனப்பட்டது. ஆனால் கோபத்தில் இருந்த நீதிபதி சிவபால் சிங் நேற்றும் தண்டனையை அறிவிக்காமல் ஒத்திவைத்தார்.

   கோபத்திற்கு காரணம் என்ன

   கோபத்திற்கு காரணம் என்ன

   நேற்றைய அமர்வில் நீதிபதி மிக முக்கியமான விஷயம் ஒன்றை கூறினார். அதில் ''உங்களை காப்பாற்ற சொல்லி நேற்று எனக்கு நிறைய போன் கால்கள் வருகிறது. வரிசையாக உங்கள் நலம் விரும்பிகள் பலர் கால் செய்தனர். அவர்கள் பெயரை நான் சொல்ல போவதில்லை. ஆனாலும் அவர்கள் உங்கள் நலத்தில் ஆர்வமாக இருக்கிறார்கள்'' என்று ஒரே அடியாக உண்மையை போட்டு உடைத்தார். இந்த போன் கால்களே அவரது கோபத்திற்கு காரணம் ஆகும்.

   அவ்வளவு குளிருதா

   அவ்வளவு குளிருதா

   நீதிபதியின் கோபத்தை லாலு புரிந்து கொள்ளாமல், ''எனக்கு ஜெயில் அறையில் குளிர்கிறது, என்னை பார்க்க யாரும் அனுமதிக்கப்படுவதில்லை'' என்று பேசினார். உடனே கோபம் அடைந்த நீதிபதி ''உங்களுக்கு தபேலா இல்லை ஆர்மோனியம் வாசிக்க தெரியும் என்றால் ஏற்பாடு செய்கிறேன். குளிருக்கு இதமாக வசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீதிமன்றத்தில் சந்திக்கும் நபர்களே போதும் தனியாக ஜெயிலிலும் சிலரை சந்திக்க வேண்டாம்'' என்று பேசினார்.

   நடிக்காதீங்க லாலு

   நடிக்காதீங்க லாலு

   இந்த நிலையில் நீதிபதியை சமாதானப்படுத்தும் நோக்கில் லாலு சாந்தமாக பேசினார். உடனே நீதிபதி ''நடிக்காதீர்கள் லாலு. உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை. அப்போது நீங்கள் தானே முதல்வர். நியாபகம் இருக்கிறதா இல்லையா'' என்று மீண்டும் கோபமாக நேருக்கு நேர் கேட்டார். பின் இன்று தீர்ப்பு விவரம் அளிக்கப்போவதில்லை, நீங்கள் செல்லுங்கள் என்று கூறிவிட்டார்.

   வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

   English summary
   Lalu hearing has been deferred again yesterday in court.The quantum of sentence has been postponed to Today. The sentencing is in connection with the Rs 950 crore fodder scam case. The former Bihar chief minister Lalu and 15 others are convicted in the case.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more