• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி 16 வயதில் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றமே!: குறைந்தபட்ச வயது சட்டத்திருத்தம் நிறைவேறியது

By Veera Kumar
|

டெல்லி: சிறார் குற்றவாளிகள் சட்ட திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் அனைத்து கட்சிகளின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதன் மூலம், கொடூர குற்றங்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயது வரையிலான குற்றவாளிகளுக்கு மற்றவர்களை போல் கடும் தண்டனை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா (உண்மையான பெயர் ஜோதி சிங்) 6 பேர் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் சிறார் குற்றவாளி ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

Juvenile Justice Bill sumbitted in Rajyasabha

கடந்த 20ம் தேதி தண்டனை முடிந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு மாணவியின் பெற்றோர், பெண்கள் அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விடுதலையை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், தற்போதுள்ள சிறார் சட்டப்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவனுக்கு இக்குற்றத்திற்காக 3 ஆண்டுகள்தான் அதிகபட்ச தண்டனை தர முடியும் என்று கூறியிருந்தது.

இந்த சூழலில் ராஜ்யசபாவில் இன்று பிற்பகல் சிறார் குற்றவாளிகள் சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே லோக்சபாவில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் ராஜ்யசபாவில் இச்சட்டம் உட்பட மேலும் பல சட்டங்கள் 6 மாதங்களாக நிலுவையில் இருந்தன.

இந்நிலையில்தான், இன்று இச்சட்ட மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி பலாத்காரம், கொலை போன்ற கொடிய குற்றங்களை செய்யும் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களை போலவே விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்க வகை செய்யப்படும். இதனால் சிறார் குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

இந்த சட்டத் திருத்தம் நிறைவேறுமா என்பது பற்றி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் மற்றும், தாய் ஆஷா தேவி ஆகியோரும், ராஜ்யசபாவில் பொதுமக்கள் மாடத்தில் அமர்ந்தபடி, விவாதத்தை கேட்டுக்கொண்டிருந்தனர்.

விவாதத்தில் பல கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் பேசினர். பின்னர் சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதையடுத்து அனைத்து கட்சி உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது. இதன் மூலம் சிறார்களின் தண்டனை வயது 18 லிருந்து 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக, தேசியவாத காங்கிரஸ்,டி.ஆர்.எஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பை மீறி சட்ட திருத்த மசோதா நிறைவேறியுள்ளது.

வாக்கெடுப்பின் போது மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Maneka Gandhi, union minister for women and child development, today submit the the Juvenile Justice Bill, which seeks to amend the law to allow trying those over 16 years of age and accused of heinous crimes, as adults.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more