For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கலெக்டர் பங்களாவை தனியாருக்கு பத்திர பதிவு செய்த அதிகாரி!

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் பங்களாவின் ஒருபகுதியை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சில நேரங்களில் தவறுதலாக பட்டா மாற்றங்கள், பத்திரப் பதிவு நடைபெற்ற செய்திகளைப் பார்த்து வருகிறோம். ஆனால் கலெக்டர் பங்களாவையே தனிநபருக்கு பத்திரப் பதிவு செய்து இருப்பது கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் மூலம் மோசடி பத்திரங்களை பதிவு செய்தல், ஒரே இடத்தை பலருக்கு பத்திரப்பதிவு செய்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் ஒருவர் கலெக்டர் பங்களாவையே தனிநபர் ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். முறையாக விசாரிக்காமல் அரசு அதிகாரி ஒருவர் பத்திரப்பதிவு செய்து கொடுத்த நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நீயா, நானா? பாஜகவினர் கடும் மோதல்.. சேர்களை தூக்கி வீசி தாக்குதல்.. பரபரத்துபோன கள்ளக்குறிச்சி நீயா, நானா? பாஜகவினர் கடும் மோதல்.. சேர்களை தூக்கி வீசி தாக்குதல்.. பரபரத்துபோன கள்ளக்குறிச்சி

 அதிகாரிகள் அதிர்ச்சி

அதிகாரிகள் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி பத்திரப்பதிவு அலுவலகம் எண் 2ல் கடந்த மாதம் ஒரு பத்திரப்பதிவு நடந்தது. கள்ளக்குறிச்சியை அடுத்த திருவங்கூர் கிராமத்தை சேர்ந்த இளவரசன் மகன் கோபி என்பவர், கள்ளக்குறிச்சி ஹாஸ்பிட்டல் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமைய்யா மனைவி சேதுமணி அம்மாள் என்பவருக்கு சர்வே எண் 5ன் கீழ் இரண்டரை சென்ட் நிலத்தை எழுதி கொடுத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 7 லட்சத்து 33 ஆயிரத்து 600. இதனை கள்ளக்குறிச்சி பத்திர பதிவாளர் கதிரவன் பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த பத்திரப்பதிவு முடிந்த பிறகு, பதிவுகள் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அதிகாரி சஸ்பெண்ட்

அதிகாரி சஸ்பெண்ட்

இந்த நிலம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மாவட்ட ஆட்சியர் பங்களாவின் ஒரு பகுதி எனத் தெரியவந்துள்ளது. கலெக்டர் பங்களாவை தனியாருக்கு பத்திரம் பதிந்து கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட பத்திர பதிவாளர் ரூபியா பேகம் சென்னை பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர் பங்களாவை பதிவு செய்து கொடுத்த கள்ளக்குறிச்சி சார் பதிவாளர் கதிரவனை பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

விசாரணை

விசாரணை

கள்ளக்குறிச்சி- கச்சிராயபாளையம் சாலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பொதுப்பணித்துறை (நீர்வளம்) நிர்வாக கட்டடிடத்தில்தான் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு பங்களா செயல்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த இடம் தனி நபர் ஒருவருக்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட பதிவாளர் ரூபியா பேகம் பத்திரம் எழுதி கொடுத்தவர் மற்றும் வாங்கியவர் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

விரைவில் ரத்து

விரைவில் ரத்து

முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது, அரசுக்கு சொந்தமான நிலம் என்பதால் விரைவில் அந்த பத்திரம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்லங்கம் சரிபார்த்தல் உட்பட பல்வேறு விதிமுறைகளுக்குப் பிறகே பத்திரப்பதிவு நடைபெறும் நிலையில், அரசுக்குச் சொந்தமான கலெக்டர் பங்களாவை தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்த சம்பவம், அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The sub-registrar who deeded a portion of the Kallakurichi collector's bungalow to a private individual has been suspended.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X