For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக கன்யா குமார் பிரச்சாரம் செய்வார் - சீத்தாராம் யெச்சுரி

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி:மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்புத் தலைவர் கன்யா குமார் பிரசாரம் செய்வார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பியதாக தேசத் துரோக குற்றாச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் கன்யா குமார். இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று அவருக்கு 6 இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நேற்று திகார் சிறையில் இருந்து கன்யாகுமார் விடுவிக்கப்பட்டார்.

Kanhaiya to campaign for Left in Bengal polls 2016, says Sitaram Yechury

இந்நிலையில் மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சுரி கூறுகையில், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக கன்யா குமார் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவித்தார்.

மேலும், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் கன்யா குமார். இடது சாரி சிந்தனை கொண்டவர். இடதுசாரி என்ற முறையில் அவர் இடதுசாரிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார். பெரும்பாலும் கம்யூனிஸ்டுகளின் கொள்கை இளஞர்களை கவர்ந்தது இல்லை. ஆகையால் நாட்டின் பல்வேறு இடங்களில் கன்யா குமார் பிரச்சாரம் செய்யும் தேவை இருக்கிறது என்றார்.

English summary
Kanhaiya kumar has been invited to campaign for the Left in the West Bengal Assembly elections starting April 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X