For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. விடுதலைக்கு எதிர்ப்பு- அப்பீல் செய்ய கர்நாடக அரசுக்கு அரசு தலைமை வழக்கறிஞரும் பரிந்துரை!

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என கர்நாடகா அரசுக்கு அம்மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மா குமார் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலையாகினர்.

Karnataka Advocate General recommends to appeal against acquittal of Jaya

இந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராதமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இது மிகவும் முக்கியமான ஒரு வழக்கு என்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம் என கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கூறி இருந்தார். அதே நேரத்தில் தி.மு.க. தரப்பில் சோனியா காந்தி மூலமாக கர்நாடகா அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த பரிந்துரை கடிதத்தின் மீது வரும் 21 ந்தேதி நடைபெறும் கர்நாடகா சட்டசபை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. அனேகமாக ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து ஜூன் முதல் வாரத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என கர்நாடகா நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
The Karnataka High Court Advocate General Ravivarma Kumar has sent a recommendation letter to the State govt for the appeal against the acquittal of Jayalalithaa in assets case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X