For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரில் காங். சார்பில் தமிழ் வேட்பாளர் சம்பத் ராஜ் போட்டி! தமிழர்களை மலைபோல் நம்பும் சித்தராமையா

தமிழர்கள் ஒரே மனதாக சம்பத்ராஜுக்கு வாக்களித்தால் மட்டுமே பாஜக வேட்பாளர் ரகுவை தோற்கடிக்க முடியும். மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் ரகு அத்தொகுதியில் பெரிதாக எதையும் செய்யவில்லை என்ற மக்களின் அதிருப்தியைய

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதில், அதிமுக 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றபோதிலும், கர்நாடகாவில் கோலோச்சும் பெரிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் (மஜத) ஆகிய கட்சிகளில் 2 தமிழர்கள் மட்டுமே போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

கோலார் மாவட்டம் தங்கவயல் (KGF) தொகுதியில் பக்தவச்சலம் என்ற முன்னாள் அதிமுக எம்எல்ஏவான தமிழருக்கு மஜத கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. பெங்களூரின் சிவி ராமன் நகர் தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் சார்பில், தற்போதைய பெங்களூர் மேயரான சம்பத் ராஜ் என்ற தமிழருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

[Read more: கர்நாடக சட்டசபை தேர்தல்: தெலுங்கு மக்களுக்கு இருக்கும் தெளிவு தமிழர்களுக்கு எப்போது வரும்?]

பாஜக சார்பில் தமிழர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அறிவார்ந்த தொகுதி

அறிவார்ந்த தொகுதி

ஆனால் சித்தராமையா சிபாரிசால் இப்போது சி.வி.ராமன் நகர் தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார் சம்பத்ராஜ். தமிழர்கள் வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் என்ற சித்தராமையாவின் நம்பிக்கைதான் இதற்கு காரணம். கடந்த தேர்தலில் இத்தொகுதியில் பாஜக வாக்கு வங்கி 50.25 சதவீதமாகவும், காங்கிரசின் வாக்குகள் 42.33 சதவீதமாகவும் இருந்தது. காங்கிரஸ் ஆதரவு அலை வீசிய அத்தேர்தலியே பாஜக வேட்பாளர் ரகு இத்தொகுதியில் வென்றுள்ளார். எனவே சம்பத்ராஜ் வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது.

மேல்தட்டு தமிழர் தொகுதி

மேல்தட்டு தமிழர் தொகுதி

இந்திராநகர், பையப்பனஹள்ளி, ஜீவன் பீமாநகர், கக்கதாசபுரா உள்ளிட்ட பிரபல ஏரியாக்கள் இத்தொகுதிக்குள் அடங்கும். சாப்ட்வேர் தொழில் உள்ளிட்ட மேல்தட்டு தமிழர்கள் கணிசமாக வசிக்கும் இத்தொகுதியில் 2013ம் ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட எஸ்.ரகு 53,364 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, 8,419 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை பறி கொடுத்த பி.ரமேஷ் இப்போது, மஜத சார்பில் அதே தொகுதியில் களமிறங்கியுள்ளார். காங்கிரஸ் சார்பில் நகர மேயரான சம்பத் ராஜ் களமிறக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் அவர் போட்டியிடுவது இதுதான் முதல் முறை.

தமிழருக்கு மேயர் பதவி

தமிழருக்கு மேயர் பதவி

2 லட்சத்து 30,313 வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியான சி.வி.ராமன் நகரில் சம்பத் ராஜ் வெற்றி பெற்றால், அது பெரிய கட்சிகளுக்கு தமிழ் வேட்பாளர்களை அதிகம் களமிறக்கும் உத்வேகத்தை அடுத்த தேர்தலில் கொடுத்தே தீரும் என்கிறார்கள் தமிழ் அமைப்பினர். பெங்களூரில் ஆண்டுக்கொருமுறை மேயர்கள் மாற்றப்படுவது நடைமுறை. மாநகராட்சியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளல நிலையில், காங்கிரசில், கவுன்சிலராக இருந்த சம்பத்ராஜை மேயராக உயர்த்திய முதல்வர் சித்தராமையா முயற்சியே காரணம். பெங்களூரின் 28 தொகுதிகளிலும் கணிசமாக உள்ள தமிழர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே சித்தராமையா இவ்வாறு செய்தார். அப்போதே கன்னட மீடியாக்கள் இந்த முடிவை விமர்சனம் செய்தன. தமிழருக்கு பெங்களூர் தாரை வார்க்கப்படுவதாக பொங்கின.

கஷ்டமான டாஸ்க்

கஷ்டமான டாஸ்க்

ஆனால் சித்தராமையா சிபாரிசால் இப்போது சி.வி.ராமன் நகர் தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார் சம்பத்ராஜ். தமிழர்கள் வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் என்ற சித்தராமையாவின் நம்பிக்கைதான் இதற்கு காரணம். கடந்த தேர்தலில் இத்தொகுதியில் பாஜக வாக்கு வங்கி 50.25 சதவீதமாகவும், காங்கிரசின் வாக்குகள் 42.33 சதவீதமாகவும் இருந்தது. காங்கிரஸ் ஆதரவு அலை வீசிய அத்தேர்தலியே பாஜக வேட்பாளர் ரகு இத்தொகுதியில் வென்றுள்ளார். எனவே சம்பத்ராஜ் வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது.

தமிழர்கள் கையில் முடிவு

தமிழர்கள் கையில் முடிவு

காங்கிரஸ் கட்சியில் கடந்த முறை வேட்பாளராக களம் கண்டு இப்போது மஜத வேட்பாளராக போட்டியிடும் பி.ரமேஷும் காங்கிரஸ் வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை ஈர்க்க கூடும். எனவே தமிழர்கள் ஒரே மனதாக சம்பத்ராஜுக்கு வாக்களித்தால் மட்டுமே பாஜக வேட்பாளர் ரகுவை தோற்கடிக்க முடியும். மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் ரகு அத்தொகுதியில் பெரிதாக எதையும் செய்யவில்லை என்ற மக்களின் அதிருப்தியையும் சம்பத்ராஜ் அறுவடை செய்தாக வேண்டும். எனவேதான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் சம்பத்ராஜ். தமிழர்கள் பக்கம் கர்நாடக பெரிய அரசியல் கட்சிகள் பார்வையை திருப்புவதற்கு சம்பத்ராஜ் வெற்றி அவசியம் என்பதால், மே 15ம் தேதி ரிசல்ட் தேதியை எதிர்பார்த்தபடி வழி மீது விழி வைத்தபடி காத்துள்ளனர் தமிழ் அமைப்பினர்.

English summary
Will the Tamil candidate from the Congress Sampath Raj win this election from C.V.Raman Nagar constituency from Bangalore?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X