For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக தேர்தல்:விஸ்வரூபமெடுக்கும் வாக்காளர் அட்டை விவகாரம்.. தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் காங்கிரஸ்

கர்நாடகாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் குறித்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் குழு ஒன்று இன்று தேர்தல் ஆணையத்

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் புயலை கிளப்பும் போலி வாக்காளர் அட்டைகள்..வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் குறித்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் குழு ஒன்று இன்று தேர்தல் ஆணையத்தை சந்திக்கிறது.

    கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. நாளை (மே 12ம் தேதி) வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

    Karnataka elections: Congress will meet EC today to discuss on 10,000 voter ID issue

    இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து முடித்துள்ளது.எல்லா கட்சியில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூடி பிரச்சாரம் செய்து வந்தனர். கர்நாடக மாநில தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை பிரச்சனை பெரிதாகி உள்ளது.

    இரண்டு நாள் முன்பு இரவு ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கொத்தாக நிறைய வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 10,000 வாக்காளர் அடையாள அட்டை நேற்று முதல்நாள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே வீட்டிற்குள் ஒரு மூட்டை முழுக்க இப்படி வாக்காளர் அடையாள அட்டை வைக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து 24 மணி நேர விசாரணைக்கு மாநில தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.அவர்கள் அந்த அறையை சோதனையிட்ட போது, அதனுள் யாருமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு நாள் விசாரணையின் முடிவில் ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளில் எதுவுமே போலியானது கிடையாது என்று தேர்தல்ஆணையம் கூறியுள்ளது.

    ஆனாலும் ஒரே வீட்டில் ஆயிரக்கணக்கில் உண்மையான அடையாள அட்டைகள் இருந்தது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. பாஜகவின் உறுப்பினர் மஞ்சுளா நஞ்சமரி என்பவர்தான் அந்த கட்டிடத்திற்கு உரிமையாளர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இவர் கைது செய்யப்படவில்லை.

    அவர்தான் இந்த மோசடிக்கு பின்பு இருக்கும் நபர் என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. இதனால், அவரை கைது செய்து தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று கூறி இருந்தது. இந்த நிலையில் இன்று இது குறித்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் குழு ஒன்று இன்று தேர்தல் ஆணையத்தை சந்திக்கிறது.

    5 முக்கியமான உறுப்பினர்கள் அடங்கிய குழு இன்று சந்திக்க உள்ளது. அந்த வீடு பாஜக உறுப்பினருடையது என்பதற்கான ஆதாரங்களை கொடுக்க உள்ளது. இன்று மதியத்திற்குள் இதுகுறித்த அறிக்கை வேறு அளிக்கப்பட உள்ளது.

    English summary
    Karnataka elections: Congress will meet EC today to discuss on 10,000 voter ID issue. The entire Karnataka debate has shifted to the voter ID scam which rocked the state late on Tuesday night. The allegation is that close to 10,000 voter IDs were found in the Raja Rajeshwari Nagar constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X