பெங்களூருக்கு 20 டிஎம்சி தண்ணீர் தேவை.. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

காவிரி விவகாரத்தில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கான நீரை 177.25 டிஎம்சியாக குறைத்து உத்தரவிட்டது.

Karnataka govt plans to appeal in supreme court on the Cauvery judgement

அதேநேரத்தில் பெங்களூரு நீர் தேவைக்காக 4.75 டிஎம்சி தண்ணீரை உச்சநீதிமன்றம் ஒதுக்கீடு செய்தது.

பெங்களூரு மக்களின் குடிநீர் தேவை மற்றும் ஆலைகளில் நீர் தேவையை பூர்த்தி செய்யவே தமிழகத்திற்கான நீர் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்தது.

இந்நிலையில் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூருக்கு 18 முதல் 20 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ள கர்நாடக கூடுதல் நீர் ஒதுக்கீடு செய்யக்கோரி மேல்முறையீடு செய்யவுள்ளது.

மேலும் மனுவில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றி வழக்கறிஞர்களுடன் கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka govt wants more water for Bengaluru from Cauvery. Karnataka govt plans to apeal in supreme court on the Cauvery judgement.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற