For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. வழக்கில் கர்நாடக அரசு நாளை அப்பீல் செய்யாது: ஆச்சார்யா

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாது என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்தது.

Karnataka govt. won't appeal against Jaya case verdict tomorrow: Acharya

கர்நாடக அரசு நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில்,

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்த ஆவணங்கள் டெல்லியில் உள்ள கர்நாடக பவனிற்கு சரிபார்க்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆவணங்களின் நகல்களை தயாரிக்கவே 5 நாட்கள் ஆகக்கூடும்.

எனவே எப்பொழுது மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை. தற்போது உச்ச நீதிமன்ற விடுமுறையாக வேறு உள்ளது. அதனால் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு தான் மேல்முறையீடு செய்யக்கூடும் என்றார்.

English summary
PP Acharya told that Karnataka government won't appeal against the verdict of Jayalalithaa case in the supreme court on moday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X