பெங்களூர் பஸ் நிலையத்துக்கு பெரியார் பெயர்.. கர்நாடக அரசு கவுரவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஒரு பேருந்து நிலையத்துக்கு பெரியாரின் பெயர் சூட்டப்படும் என கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு அரசு ஊழியர்கள் மாளிகையில் பெரியாரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கலந்து கொண்டு பெரியார் மற்றும் அம்பேத்கரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Karnataka minister said that Periyar name will keep in a bus stand at Bengaluru

இதைத்தொடர்ந்து பேசிய அவர், திராவிட கலாச்சாரம் வளர வேண்டும் என்பதற்காகவும் சமூக நீதிக்காகவும் தந்தை பெரியார் போராடியதை நினைவு கூர்ந்தார். பெரியார் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடியதையும் ராமலிங்க ரெட்டி நினைவு கூர்ந்தார்.

பெரியாரின் போராட்டங்களால் நாட்டில் பெரும் புரட்சி ஏற்பட்டது என்று கூறிய அவர் இளைஞர்கள் பெரியார் வழியே பின்பற்ற வேண்டும் அவர் கூறினார். பெங்களூரில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றிற்கு பெரியாரின் பெயர் சூட்டப்படும் என்றும் அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karnataka minister said that Periyar name will keep in a bus stand at Bengaluru. In Periyar birthday function Karnataka minister Ramalinga reddy announced this.
Please Wait while comments are loading...