For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக சட்டசபை தேர்தல் 2018 ... கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் சொல்வது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் மீண்டும் காங். ஆட்சி.. வெளியானது பரபரப்பு சர்வே..வீடியோ

    பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும்? எத்தனை சதவீதம் வாக்கு யாருக்கு? உள்ளிட்ட கருத்து கணிப்புகளை சிபோர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    வரும் மே 12-ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க பாஜகவும், இந்த இரண்டையும் ஓரங்கட்டிவிட்டு ஆட்சிக் கட்டிலில் அமர மதசார்பற்ற ஜனதா தளமும் போராடி வருகின்றன.

    Karnataka pre-poll survey: Here are expected vote share details given

    தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களது சாதனைகள் குறித்தும் மற்ற கட்சியினரின் நிறைவேற்றாத திட்டங்கள் , வாக்குறுதிகள் குறித்தும் மக்களிடம் பிரசாரம் செய்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க கருத்து கணிப்புகளும் முக்கிய பங்காற்றி வருகின்றன.

    எதிர்பார்க்கப்படும் வாக்கு சதவீதம்

    தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் சிபோர் என்ற நிறுவனம் எடுத்துள்ளது. கடந்த 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை எடுத்த கருத்து கணிப்பு 61 தொகுதிகளில் சிபோர் நிறுவனம் நடத்தியுள்ளது. அதில் வாக்கு சதவீதம், எந்த வயதினர் எந்த கட்சிக்கு வாக்களிப்பர்?, ஆண், பெண் வாக்காளர்கள் எத்தனை சதவீதம் பேர் எந்த கட்சிக்கு வாக்களிப்பர்? என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

    அந்த கருத்து கணிப்புகளின்படி, காங்கிரஸ் கட்சிக்கு 45 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 32 சதவீத வாக்குகளும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 18 சதவீத வாக்குகளும், மற்ற கட்சிகளுக்கு 5 சதவீத வாக்குகளும் கிடைக்கும்.

    Karnataka pre-poll survey: Here are expected vote share details given

    வாக்காளர்களின் பாலின அடிப்படையிலான வாக்கு சதவீதம்

    அது போல் காங்கிரஸ் கட்சிக்கு 43 சதவீதம் ஆண்களும், 47 சதவீதம் பெண்களும், பாஜகவுக்கு 34 சதவீதம் ஆண்களும், 30 சதவீத பெண்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 19 சதவீத ஆண்களும், 16 சதவீத பெண்களும், மற்ற கட்சிகளுக்கு 4 சதவீத ஆண்களும், 7 சதவீத பெண்களும் வாக்களிப்பர்.

    Karnataka pre-poll survey: Here are expected vote share details given

    வாக்காளர்களின் வயது அடிப்படையிலான வாக்கு சதவீதம்

    காங்கிரஸ் கட்சிக்கு 18-25 வயதுடையோர் 45 சதவீதம் பேரும், 26 - 35 வயதுடையோர் 47 சதவீதம் பேரும், 36-50 வயதுடையோர் 42 சதவீதம் பேரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 49 சதவீதம் பேரும் வாக்களிப்பர். அது போல் பாஜகவுக்கு முறையே 36 சதவீம், 32 சதவீதம், 33 சதவீதம் 26 சதவீதம் பேரும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 15 சதவீதம், 17 சதவீதம், 19 சதவீதம், 20 சதவீதம் பேரும் வாக்களிப்பர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Karnataka pre-poll survey: Here are expected vote share details given
    English summary
    The Congress will win 118 to 128 seats in the Karnataka assembly elections, the latest survey states. The second pre-election poll conducted by C fore says the Congress would end up with 118-128 seats. It also state about expected vote share, age wise and gender wise voting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X