For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காற்று மாசைக் கட்டுப்படுத்த ஐடியா கொடுத்தா ரூ5,000 பரிசு- கெஜ்ரிவால்

காற்றுமாசை கட்டுப்படுத்த ஐடியா கொடுப்பவர்களுக்கு டெல்லி அரசு ரூ5,000 பரிசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் நிலவி வரம் கடுமையாக காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களிடம் டெல்லி அரசு ஆலோசனைக் கேட்டுள்ளது. நல்ல ஆலோசனைகளை தருவோருக்கு ரூ5,000 பரிசும் அறிவித்துள்ளது டெல்லி அரசு.

டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

kejriwal government invites ideas to control Air pollution in delhi

பள்ளிகளுக்கு லீவு விட்டுள்ள டெல்லி அரசு, கட்டுமானப் பணிகளிக்கும் கட்டடங்களை இடிக்கும் பணிகளுக்கும் தற்காலிக தடை விதித்துள்ளது.

அனல்மின் நிலையத்திலும் மின் உற்பத்தியை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு ஆணையிட்டுள்ளது. குப்பைக்கிடங்குகளில் பற்றி எரியும் தீயை அணைப்பது, சாலைகளை சுத்தப்படுத்துவது, தண்ணீர் தெளிப்பது, செயற்கை மழையை உண்டாக்குவது என கற்ற வித்தைகளையெல்லா இறக்கியும் காற்று மாசு குறைந்தபாடில்லை.

இதனால் காற்று மாசைக் குறைக்க மக்களிடம் ஆலோசனைக் கேட்டுள்ள சிறந்த ஐடியாக்களை கொடுப்பவர்களுக்கு 5 000 ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

English summary
delhi government announce Rupees 5000 cash prize who gives idea to control Air pollution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X