கேரளா: 'சர்ச்சை' ஆளுநரின் 30 அடி உயர கொடும்பாவியை எரித்து புத்தாண்டு கொண்டாடிய இடதுசாரி மாணவர்கள்!
கண்ணூர்: கேரளாவில் சர்ச்சைக்குரிய ஆளுநர் ஆரீப் முகமது கானின் 30 அடி உயர கொடும்பாவியை எரித்து ஆளும் இடதுசாரி கட்சிகளின் மாணவர் அமைப்புகள் 'புத்தாண்டு' கொண்டாடியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநர் ஆரீப் முகமது கானுக்கும் கேரளா அரசுக்கும் இடையே பெரும் யுத்தமே நடைபெற்று வருகிறது. இந்த மோதல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் ஆளுநர் ஆரீப் முகமது கான், கேரளா மாநில இடதுசாரி அரசை மிக மிக கடுமையாக இடைவிடாமல் விமர்சித்து வருகிறார். பாஜகவின் சித்தாந்தங்களை செயல்படுத்துவதிலும் பரப்புவதிலும் தீவிரம் காட்டுகிறார். இதனால் ஆளுநர் ஆரீப் முகமது கானுக்கு எதிராக ஆளும் சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ. SFI பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறது. கண்ணூரில் எஸ்.எஃப்.ஐ. நடத்திய போராட்டம் ஆளுநர் ஆரீப் முகமது கானை கொந்தளிக்க வைத்தது. என் மீது தாக்குதல் நடத்த முதல்வர் பினராயி விஜயன் ஆட்களை அனுப்புகிறார் எனவும் கூட ஆளுநர் ஆரீப் முகமது கான் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார்.
കണ്ണൂർ പയ്യമ്പലത്ത് ഗവർണറുടെ 'പാപ്പാഞ്ഞിക്കോലം' കത്തിച്ച് SFI#sfi #arifmohammedkhan #kannur pic.twitter.com/UN1EH7saL7
— SUNIL YESUDAS (@SUNILYESUDAS2) December 31, 2023
இந்த நிலையில் கேரளாவின் கண்ணூர் பய்யம்பலம் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தன. அப்போது எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் கடற்கரையில் 30 அடி உயரத்திலான ஆளுநர் ஆரீப் முகமது கான் கொடும்பாவியை நிறுத்தி வைத்தனர். பின்னர் புத்தாண்டு தினத்தை கொண்டாடும் வகையில் ஆளுநர் ஆரீப் முகமது கானின் 30 அடி உயர கொடும்பாவிக்கு தீ வைக்கப்பட்டது. இந்த தீ கொளுந்துவிட்டு எரிய எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர், ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்துக்கு எஸ்.எஃப்.ஐ. மாநில தலைவர் அனுஶ்ரீ தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்துக்கு ஆளுநர் ஆரீப் முகமது கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் என் உருவபொம்மையை தான் தற்போது எரித்துள்ளனர். கண்ணூரில் மனிதர்களை உயிரோடு கொலை செய்கிறார்கள் எனவும் கொந்தளித்திருக்கிறார் ஆரீப் முகமது கான். ஆளுநரின் 30 அடி உயர கொடும்பாவி எரிக்கப்பட்டது தொடர்பாக எஸ்.எஃப்.ஐ. அமைப்பினர் 20 பேர் மீது கேரளா போலீசார் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications