For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாட்டிறைச்சி தடையை எதிர்கொள்ள, சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்துகிறது கேரளா

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மத்திய அரசின் மாட்டிறைச்சித் தடை குறித்து விவாதம் நடத்த வரும் 8ம் தேதி கேரள சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

பசு, காளை, எருமை மாடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் வாங்கவோ விற்கவோ கூடாது என்று புதிய உத்தரவை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மே 23ம் தேதி பிறப்பித்தது.

Kerala Assembly to meet on June 8 to discuss cattle issue

இது நாடெங்கும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. அதிலும் கேரள மாநிலத்தில் எதிர்ப்பு போராட்டங்கள் உச்சம் தொட்டுள்ளன. இந்நிலையில் ஜூன் 8ல் சட்டசபையை கூட்டி இதுபற்றி ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடைபெற்ற அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடுவதா, மாநில அதிகாரத்திற்கு உட்பட்டு சட்டம் இயற்றுவதா, பிற மாநில முதல்வர்களை அழைத்து மாட்டிறைச்சித் தடையை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவதா என்பது குறித்தெல்லாம் சிறப்பு சட்டசபை கூட்டத்தின்போது எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கப்படும் எனத் தெரிகிறது.

English summary
The Kerala cabinet today decided to convene a special one-day Assembly session on June 8 to discuss issues connected with the Centre’s ban on sale and purchase of cattle from animal markets for slaughter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X