For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாராட்டுவதற்காக மாணவியை "நீ..ண்ட" நேரம் கட்டி பிடித்த மாணவன் இடைநீக்கம்.. கேரள பள்ளி அதிரடி ஆக்ஷன்

பாராட்டுவதற்காக மாணவியை நீண்ட நேரம் கட்டிப் பிடித்த மாணவனை கேரள மாநில பள்ளி இடைநீக்கம் செய்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    நீண்ட நேரம் கட்டி பிடித்த மாணவன் இடைநீக்கம்...வீடியோ

    திருவனந்தபுரம்: மாணவியை பாராட்ட நினைத்து அவரை நீண்ட நேரம் கட்டிப் பிடித்த மாணவனை கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

    திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் புரிந்த சாதனையை பாராட்ட நினைத்தார். இதையடுத்து அந்த மாணவியை அவர் கட்டிப்பிடித்து தனது வாழ்த்துகளை கூறிக் கொண்டார்.

    எனினும் மாணவியை காம நோக்கத்துடன் நீண்ட நேரம் மாணவன் கட்டிப்பிடித்ததாக புகார் கூறிய பள்ளி நிர்வாகம் அவரை கடந்த ஜூலை மாதம் முதல் 5 மாதங்களுக்கு பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்தது.

    பிளஸ் 2 தேர்வு

    பிளஸ் 2 தேர்வு

    5 மாதங்களுக்கு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பிளஸ் 2 தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும் அபாயம் அந்த மாணவனுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தை நாட மாணவனின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அதேபோல் மாணவியையும் நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் இரு மாணவர்களையும் பள்ளியில் மீண்டும் சேர்த்து கொள்ள உத்தரவிட்டது. எனினும் அந்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, ஒழுங்கீன செயல்கள் தொடர்பான விவகாரத்தில் பள்ளி எடுக்கும் முடிவே இறுதியானது என்று தெரிவித்துள்ளது.

    டீச்சர் மிரட்டியதும்...

    டீச்சர் மிரட்டியதும்...

    இதுகுறித்து பள்ளி முதல்வர் கூறுகையில், பாராட்டு தெரிவிப்பதற்காக மாணவியை கட்டிப் பிடித்த மாணவன் நீண்ட நேரம் விடாமல் பிடித்துக் கொண்டிருந்தான். சுமார் வினாடிக் கணக்கில் நடக்க வேண்டிய விஷயத்தை 5 நிமிடங்களுக்கு செய்தான். அங்கிருந்த ஆசிரியை ஒருவர் திட்டியதும் இருவரும் விலகினர். இதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் மாணவன் வெளியிட்டுள்ளதை ஏற்க இயலாது என்றார்.

    நான் சாதாரணமாக செய்தேன்

    நான் சாதாரணமாக செய்தேன்

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவன் கூறுகையில் சாதாரணமாக நடந்த செயலுக்கு எனது பாட்டி முன்பு கண்ட வார்த்தைகளால் என்னை வசைபாடினர். எனது சாதாரண இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டபிறகும், ஏதோ பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதை போல் என்னை நடத்தினர். நான் பிளஸ் 2 தேர்வை எழுதியே ஆக வேண்டும் என்றார்.

    வளர்ப்பை குறை கூறினர்

    வளர்ப்பை குறை கூறினர்

    இருவர் மீதும் பள்ளி நிர்வாகம் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அந்த மாணவியிடம் கேட்டபோது என்னுடைய செயலுக்கு பாராட்டு தெரிவித்த அந்த மாணவனுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அவர் என்னை கட்டிப்பிடித்தது சில வினாடிகள்தான் நீடித்தன. ஆனால் பள்ளி நிர்வாகமோ 5 நிமிடங்கள் என்கிறது. என்னையும் எனது குடும்பத்தையும் கடுமையான வார்த்தைகளால் திட்டி எனது வளர்ப்பை கேள்வி எழுப்பினர் என்றார் அந்த மாணவி.

    பள்ளி நிர்வாகத்தின் பதில் என்ன

    பள்ளி நிர்வாகத்தின் பதில் என்ன

    மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் இதுபோன்று கடும் நடவடிக்கைகள் எடுக்காமல் மாணவர்களை சீர்திருத்தும் நடவடிக்கைகளில் பள்ளி நிர்வாகம் ஈடுபட வேண்டும் என்று தனது மகனுக்காக பணியை ராஜினாமா செய்துவிட்டு மாணவனின் தந்தை போராடி வருகிறார். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், மாணவருக்கு தேர்தல் எழுத அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய பள்ளிக் கல்வி ஆணையம்தான் முடிவு எடுக்கும் என்று கூறியுள்ளது.

    English summary
    A 16-year-old student of a school in Kerala's Thiruvananthapuram has been suspended indefinitely -- over a girl student hug that lasted too long.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X