For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாவ் முதல்வர்.. எதிர்க்கட்சித் தலைவருடன் கை கோர்த்து வெள்ள பாதிப்பை பார்வையிடும் பினராயி!

Google Oneindia Tamil News

Recommended Video

    எதிர்க்கட்சித் தலைவருடன் வெள்ள பாதிப்பை பார்வையிடும் பினராயி- வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளாவை வரலாறு காணாத வகையில் உலுக்கி எடுத்து வரும் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மீள வழி தெரியாமல் அந்த மாநிலம் திணறி வருகிறது. ஆனால் அந்த மாநில அரசியல் தலைவர்களும், மக்களும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருப்பது அசரடிக்கிறது.

    எல்லா விஷயங்களிலும் கேரளா ரொம்பவே வித்தியாசமான மாநிலம். நாடு முழுவதும் அரசியல் தலைவர்களுக்கு இடையே அடிதடியும், வெட்டுக் குத்தும், விஷமப் பேச்சுக்களும், ஒற்றுமையின்மையும் நிலவி வந்தாலும் கூட கேரளாவில் மட்டும், அரசியல் மாண்புகள் உயிர்ப்போடு இருக்கும்.

    Kerala CMs another amazing action

    அங்குள்ள அரசியல் தலைவர்கள் எளிமைக்குப் போனவர்கள். முதல்வர் முதல் சாதாரண கவுன்சிலர் வரை மக்களுடன் நேரடியாக தொடர்புகளைப் பேணுவதில் அக்கறை காட்டுவார்கள். இல்லாவிட்டால் மக்கள் அவர்களைத் தூக்கி எறிந்து விடுவார்கள்.

    இந்த நிலையில் தற்போதைய மழை வெள்ள பாதிப்புகளை கேரள எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் சென்னிதலாவுடன் இணைந்து போய் பார்த்து அசத்தி வருகிறார் முதல்வர் பினராயி விஜயன். இதுதொடர்பான புகைப்படம் தற்போது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து சங்கர்தாஸ் என்பவர் போட்டுள்ள டிவீட்டில், முதல்வர் பினராயி விஜயனும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் இணைந்து வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டுள்ளனர். பாஜக ஆளும் எந்த மாநிலத்திலாவது இதை எதிர்பார்க்க முடியுமா. தனது அரசியல் எதிர்ப்பாளர்கள் குறித்து பிரதமர் பேசும் பேச்சைக் கூட அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் அளவில்தான் பாஜக உள்ளது என்று கூறியுள்ளார்.

    English summary
    Kerala CM Pinarayi Vijayan is viewing the flooded areas in the state with Opposition leader Ramesh Chennithala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X