Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளாவில் திடீர் பரபரப்பு- டீ கடையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் தர்ணா- SFI கறுப்பு கொடிக்கு பதிலடி!

Subscribe to Oneindia Tamil

கொல்லம்: கேரளாவில் தமக்கு கறுப்பு கொடி காட்டிய இடதுசாரி மாணவர் அமைப்பாகிய SFI நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையோர டீ கடையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Kerala Governor hold protest tea stall in against SFI waves black flag

கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளும் இடதுசாரி அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். ஆளும் இடதுசாரி அரசையும் முதல்வர் பினராயி விஜயனையும் பாஜகவினரைப் போல பகிரங்கமாகவே விமர்சனம் செய்து வருபவர் ஆளுநர் ஆரிப் முகமது கான்.

ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக கேரளா மாநில அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

கேரளா ஆளுநருடன் ஆளும் இடதுசாரி கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் மோதுகின்றன. அண்மையில் சட்டசபை கூட்டத் தொடரிலும் கூட மாநில அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் 1.15 நொடிகளிலேயே உரையை முடித்துவிட்டு ஆளுநர் ஆரிப் முகமது கான் வெளியேறியது சர்ச்சையாகவும் வெடித்தது. அதேபோல நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் நடத்திய தேநீர் விருந்து நிகழ்ச்சிகளும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று கொல்லம் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்றார். அப்போது நிலமேல் என்ற இடத்தில் ஆளும் இடதுசாரிகளின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ (SFI) இயக்கத்தினர் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினர். Go back என்ற முழக்கங்களையும் ஆரிப் கானுக்கு எதிராக முழங்கினர். அப்போது திடீரென தமது வாகனத்தை நிறுத்திய ஆளுநர் ஆரிப் முகமது கான், போராட்டக்காரர்களுடன் நேருக்கு நேரா வாக்கு வாதம் செய்தார். அப்போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், Go Back என முழக்கமிட்டனர்.

இதனையடுத்து திடீரென அருகே இருந்த டீ கடைக்குள் நுழைந்த ஆரிப் முகமது கான் அங்கேயே அமர்ந்து கொண்டார். அப்போதும் எஸ்.எஃப். ஐ இயக்கத்தினர் விடவில்லை. டீ கடையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் கடும் கோபமடைந்த ஆளுநர் ஆரிப் முகமது கான், போராட்டக்காரர்களை போலீசார் பாதுகாக்கின்றனர்; கறுப்புக் கொடி காட்டியவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை தாம் டீ கடையை விட்டு வெளியேற மாட்டேன் என கூறி தர்ணா போராட்டம் நடத்தினார். மாநிலத்தின் ஆளுநர் பதவியில் இருப்பவர் டீ கடையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+