3 மாநில தேர்தல் முடிவுகளால் வடகிழக்கு மாநில அரசியல் களம் மாறப்போகிறது.. மத்திய அமைச்சர் சொல்கிறார்
டெல்லி: வடகிழக்கு மாநில, அரசியல் களத்தில் மாறுபாடு ஏற்படும் என்று மத்திய இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்தார்.
நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில், வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான கிரன் ரிஜிஜு கூறுகையில், இடதுசாரிகள் கூட்டணியில் இருந்து திரிபுராவை கைப்பற்றுவோம். எங்களது தனிப்பட்ட கள ஆய்வுகள், அம்மாநிலத்தில் பாஜக கூட்டணி 36-42 தொகுதிகளை வெல்லும் வாய்ப்புள்ளதாக கூறுகிறது.

நாகாலாந்தில் பாஜக அரசு அமைக்கும். நாகா ஒப்பந்தத்தை செயல்படுத்தும் ஒரு அரசு அங்கே தேவை. அங்கே பாஜக கூட்டணி 30 தொகுதிகளுக்கும் மேல் கைபற்றும். சிறு, சிறு கட்சிகளும், பாஜகவுக்கு ஆதரவு அளிக்கிறது. சில கட்சிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். இவ்வாறு கிரன் ரிஜிஜு தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!