ஜெயலலிதாவை விட தினகரன் சிறந்த அரசியல்வாதி அல்ல... குஷ்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜெயலலிதாவை விட தினகரன் சிறந்த அரசியல்வாதி அல்ல, ஏஅவர் முதல்வராக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.

ஆர்கே நகரில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், தினகரன் வெற்றி மூலம் பணம் பேசியிருக்கிறது தெளிவாக தெரிகிறது.

Kushboo says that Dinakaran is not a good politician

ஜெயலலிதாவைவிட சிறந்த அரசியல்வாதி அல்ல தினகரன். தினகரனால் எப்படி இவ்வளவு வாக்குகள் பெற முடியும். அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதே தினகரனின் நோக்கம்.

2ஜி வழக்கை வைத்தே பாஜக பிரசாரம் செய்தது. ஆனால் இப்ப அந்த வழக்கே ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது. முதல்வர், துணை முதல்வர் பதவிகளுக்கு மரியாதை தர வேண்டும்.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் அறிவிக்க வேண்டும். தினகரன் முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்ப மாட்டார்கள். பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் குஷ்பு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Congress Spokesperson Kushboo says that Dinakaran is not a good politician.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற