For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”முக்கால் ரூபாய் காசானாலும் மும்பையில் குடித்தனம் செய்யலாம்”

Google Oneindia Tamil News

மும்பை: உலகில் மிகக் குறைந்த செலவில் வாழ்வதற்கு ஏற்ற பெருநகரங்கள் பட்டியலில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது. இப் பட்டியலில் டெல்லிக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது.

இஐயு சார்பில் "உலகளாவிய வாழ்க்கைச் செலவினம்" என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

Less salary, good living in Mumbai…

இந்திய நகரங்கள் பட்ஜெட்க்கு ஏற்றவை:

ஐரோப்பிய நகரங்களுடன் ஒப்பிடு கையில் ஆசிய நகரங்கள் குறிப்பாக இந்தியத் துணைக்கண்ட நகரங்கள் குறைந்த செலவில் வாழ்வதற்கு ஏற்றவையாக உள்ளன.

வருமான ஏற்றதாழ்வு:

இந்திய நகரங்கள் மிகக் குறைந்த செலவினத்தையும், மிக அதிக செலவினத்தையும் கொண்டிருப்பதற்குக் காரணம் அங்கு நிலவும் வளமை மற்றும் ஏழ்மையில் நிலவும் அதிக ஏற்றத் தாழ்வுதான் காரணம்.

வேலையும் இல்ல,கூலியும் இல்ல:

இந்திய நகரங்களில் கூலியும் விலையும் குறைவு.அரசாங்கத்தின் மானியமும் செலவின விகிதத்தைப் பெரு மளவு குறைக்கிறது. பாகிஸ்தானின் கராச்சி, வாழ்க்கைச் செலவினம் குறைந்த பெருநகரங்களில் இரண்டாமிடம் பிடித்துள்ளது. டெல்லி, சிரியாவின் டமாஸ்கஸ், நேபாளத்தின் காத்மண்டு ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

வாழ்க்கைக்கான செலவுகள்:

வாழ்க்கைச் செலவினம் குறித்த ஆய்வை இஐயு ஆண்டுக்கு இருமுறை மேற்கொள்கிறது. உணவு, உடை, இருப்பிடத் தேவைகள், குடிக்கும் பொருள்கள், வீட்டு வாடகை, போக்குவரத்து, தனிமனித தேவை களுக்கான பொருள்கள், தனியார் பள்ளிகள், பயன்பாட்டு கட்டணங்கள், பொழுதுபோக்குக் கட்டணங்கள் உள் ளிட்டவை இதில் அடங்கும். நியூயார்க் நகரம் இந்த ஒப்பீட்டுக்கான அடிப்படை நகரமாகக் கொள்ளப்படுகிறது.

English summary
A poor or rich person who is not a matter both can be live in Mumbai in a less salary amount, a new research says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X