For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனிதாபிமானமற்ற வன்முறை தவறு.. மனிதர்களாக நடப்போம்.. பெங்களூர் வன்முறைக்கு பிரகாஷ் ராஜ் கண்டனம்!

By Arivalagan
Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூரு நகரிலும், தமிழகத்தின் சில பகுதிகளிலும் நடந்த காவிரிப் பிரச்சினை தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மனிதாபிமானவற்றைவ என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டித்துள்ளார்.

கர்நாடக மக்களின் கோபம் தனக்குப் புரிவதாகவும், அதை அவர்கள் காட்டிய விதம் தவறு என்றும், மனிதர்களாக நடக்க முயற்சிப்போம் என்றும் பிரகாஷ் ராஜ் தனது செய்தியில் கூறியுள்ளார்.

prakash

கர்நாடகத்தைச் சேர்ந்தவரான பிரகாஷ் ராஜ் தமிழிலும் மிகப் பிரபலமானவர். கன்னடத்தை விட தமிழில்தான் அவர் மிகச் சிறந்த நடிகராக திகழ்கிறார். தமிழ் மக்களின் அபரிமிதமான அன்பையும் பெற்றவர் பிரகாஷ் ராஜ். பெங்களூர் வன்முறையை எல்லோரையும் போல பிரகாஷ் ராஜையும் அதிர வைத்துள்ளது.

இதுதொடர்பாக அவர் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழிலும் பேசாமல் தனது தாய் மொழியான கன்னடத்திலும் பேசாமல் ஆங்கிலத்தில் பேசியுள்ளார் பிரகாஷ் ராஜ். இதன் மூலம் இரு மாநிலத்தவருக்கும் தான் பொதுவானவன் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ் ராஜின் செய்தியிலிருந்து..

  • கர்நாடகம், தமிழகத்தில் நடக்கும் வன்முறைகள் வேதனை வருகிறது
  • நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பது உண்மைதான், அதை எதிர்த்து நிச்சயம் போராட வேண்டும்
  • ஆனால் இப்படிப்பட்ட வன்முறை மூலம் நியாயம் கேட்கக் கூடாது
  • இதுதான் நாம் நமது குழந்தைகளுக்கு காட்டும் நல் வழியா?
  • பஸ்களைக் கொளுத்துவது, சொத்துக்களை அழிப்பது போன்ற மனிதாபிமானமற்ற வன்முறை தவறு
  • குழந்தைகள் எல்லாம் பயந்து போயிருப்பது வேதனையைத் தருகிறது
  • முதலில் நாம் மனிதர்களாக இருக்க முயற்சிப்போம்
  • பஸ்களை கொளுத்துவதும், அடுத்தவரைத் தாக்குவதும் சரியான போராட்ட முறை அல்ல
  • உங்களது கோபம் எனக்குப் புரிகிறது.. ஆனால் அதை வெளிப்படுத்திய விதம் தவறு

யார் வன்முறையில் ஈடுபட்டிருந்தாலும் அதைக் கைவிட்டு விட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

English summary
Let's seek justice ... But not with such inhuman violence. It's painful to see children terrified. PEACE pleassss says Actor Prakash Raj.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X