For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரில் வாகனத்தை மறித்த சிங்கங்கள்.. பதறிய சுற்றுலா பயணிகள் - வீடியோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள பானர்கட்டா உயிரியல் பூங்காவில், சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை சிங்கங்கள் சூழ்ந்துக் கொண்டு மிரட்டிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பானர்கட்டா உயிரியல் பூங்கா மிகவும் பிரபலமானது. இங்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் கடந்த வார இறுதியிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

lion attacks safari vehicles carrying visitors and tried to get the doors opened

விலங்குகளை பார்ப்பதற்காக பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இன்னோவா வாகனத்தில் சுற்றுலா பயணிகள் சென்றபோது ஒரு சிங்கம் வாகனத்தின் முன்பாக நின்று வழி மறைக்க, மற்றொரு சிங்கம் வாகனத்தின் பின் பக்கமாக ஏறி, கண்ணாடியை உடைக்க முயற்சித்தது. இதனால் காரில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

English summary
In what looked like a deadly attack, at least three lions of Bengaluru's Bannerghatta National Park charged at two safari vehicles carrying visitors and tried to get the doors opened.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X